விஜய் சேதுபதியின் ஒரு நல்லநாள் பார்த்து செல்றேன் சேட்டிலைட் உரிமை சோல்ட் அவுட்

0
197
Vijay Sethupathi

விஜய் சேதுபதி நடித்துள்ள ஒரு நல்லநாள் பார்த்து சொல்றேன் படத்தின் தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை சன் டிவி வாங்கியுள்ளது.

சில வருடங்கள் முன்பு தமிழ்ப் படங்களின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை வாங்குவதில் பின்னடைவு ஏற்பட்டது. பல தொலைக்காட்சிகள் எந்தப் படங்களின் உரிமையையும் வாங்கவில்லை. இந்நிலையில் அமேசான், நெட்பிளிக்ஸ் போன்று சன் குழுமம் சன் நெக்ஸ்ட் என்ற மொபைலில் படங்கள் பார்க்கும் வசதியை ஆரம்பித்தது. அதற்காக படங்களின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை வாங்க ஆரம்பித்தது. சன் தொடங்கி வைத்த இந்த வியாபாரம் இப்போது சூடு பிடித்துள்ளது.

சில தினங்கள் முன்பு அரவிந்த்சாமியின் பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை ஸீ தமிழ் தொலைக்காட்சி வாங்கிய நிலையில், விஜய் சேதுபதியின் ஒரு நல்லநாள் பார்த்து சொல்றேன் படத்தின் ஒளிபரப்பு உரிமையை சன் தொலைக்காட்சி வாங்கியுள்ளது.

விஜய் சேதுபதி, கௌதம் கார்த்திக், நடித்துள்ள இந்தப் படத்தை ஆறுமுககுமார் இயக்கியுள்ளார். இம்மாதம் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

இதையும் படியுங்கள்: ஒக்கி: கண்ணுக்குப் புலப்படாத மக்களுக்கு நடந்த கண்ணுக்குப் புலப்படாத பேரிடர்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்