விஜய் சேதுபதிக்காக இறங்கி வந்த விஜய்

0
234

விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘பிகில்’ படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. பிகில் படம் முடிவடைந்ததை அடுத்து, தனது 64வது படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டார் விஜய்.

சேவியர் பிரிட்டோ தயாரித்து வரும் இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இந்நிலையில் ‘விஜய் 64’ படக்குழுவினரிடம் விஜய் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். விஜய் சேதுபதி பல மொழிகளில் நடித்து வருகிறார்.

ஒரே சமயத்தில் பல படங்களில் கவனம் செலுத்தி பிஸியான நடிகராக இருக்கிறார். இதனால் விஜய் சேதுபதியின் காட்சிகள் அனைத்தையும் முதலில் எடுத்துவிடுங்கள். அதற்குப் பிறகு மீதமுள்ள காட்சிகளை எடுத்துக் கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.

விஜய்யின் இந்த வேண்டுகோள் குறித்து படக்குழுவினர் விஜய் சேதுபதியிடம் தெரிவித்துள்ளனர். அவரோ மிகவும் நெகிழ்ந்து போய்விட்டாராம். இதனால் அடுத்தகட்டப் படப்பிடிப்பிலிருந்து விஜய் – விஜய் சேதுபதி சம்பந்தப்பட்ட காட்சிகளைப் படமாக்க படக்குழு ஆயத்தமாகி வருகிறது.

படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் முடிந்துவிட்ட நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு நவம்பர் முதல் வாரத்தில் டெல்லியில் நடைபெற உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here