இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். இவர் இயக்கிய பீட்சா, ஜிகர்தண்டா, இறைவி ஆகிய படங்கள் திரை விமர்சகர்களிடையேயும், ரசிர்களிடையேயும் நல்ல வரவேற்பை பெற்றது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் ரஜினியின் ‘பேட்ட’ . பேட்ட படத்தின் வெற்றியை தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளிலும், ஊடகங்களிலும் பேசும் கார்த்திக் சுப்புராஜ் சமீபத்தில் தனியார் இணையதள ஊடகத்துக்கு விஜய், அஜித் வைத்து படம் எடுத்தால் எப்படி பட்ட கதையை எடுப்பேன் என்று கூறியிருக்கிறார்,

நடிகர் விஜய்க்கு மாஸ் கேங்க்ஸ்டர் படம் இயக்குவேன் என்றும், நடிகர் அஜித்தை வைத்து காமெடி படம் இயக்குவேன் என்றும் கமல்ஹாசனுக்கு வரலாற்று கதையம்சம் கொண்ட படத்தை இயக்குவேன் என்றும் தெரிவித்திருக்கிறார்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்