நடிகர் விஜய்யை இயக்குநர் விக்னேஷ்சிவன் நேற்று சந்தித்தார். இந்த சந்திப்பு விஜய்யின் அடுத்தப் படம் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.

விஜய் தனது 62 வது படத்தில் தற்போது நடித்து வருகிறார். முருகதாஸ் இயக்கும் இந்தப் படத்தைத் தொடர்ந்து அவர் யார் இயக்கத்தில் நடிக்கிறார் என்பது இன்னும் பதில் தெரியாத கேள்வியாகவே உள்ளது. அட்லி, சசிகுமார், அமீர், ஏ.எல்.விஜய், மோகன்ராஜா உள்பட ஏராளமான இயக்குநர்கள் விஜய்யை இயக்கும் விருப்பத்தில் உள்ளனர். இந்நிலையில் நேற்று விக்னேஷ்சிவன் விஜய்யை சந்தித்தார்.

தானா சேர்ந்த கூட்டத்துக்குப் பிறகு அதனை தயாரித்த ஸ்டுடியோ கிரீனுக்கு சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படம் இயக்குவதாக இருந்தார் விக்னேஷ்சிவன். என்ன நடந்ததோ… இப்போது அந்தப் படத்தை ராஜேஷ் இயக்குகிறார். நேற்றைய சந்திப்பிற்குப் பிறகு, விஜய் படத்தை இயக்கப் போவதால்தான் விக்னேஷ்சிவன் சிவகார்த்திகேயன் படத்தை இயக்கவில்லை என்ற பேச்சு அடிபடுகிறது.

இது உண்மையா இல்லையா என்பது விரைவில் அதிகாரப்பூர்வமாகவே தெரிந்துவிடும்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்