ஒரு படம் முடியும் முன்பே அடுத்தப் படத்தை அறிவித்து இடைவெளி இல்லாமல் நடிப்பது விஜய்யின் ஸ்டைல். ஒரு படத்துக்கும் இன்னொரு படத்துக்கும் நடுவில் அதிகபட்சம் இரண்டு வாரங்கள் ஓய்வு எடுத்துக் கொள்வார். அதனால்தான் ஒருநேரத்தில் ஒரு படம் என்ற கொள்கை வைத்தும், குறுகிய காலத்தில் 62 வது படத்தை எட்டியிருக்கிறார்.

விஜய்யின் 62 வது படத்தை முருகதாஸ் இயக்கி வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பு. இதையடுத்து விஜய் யார் இயக்கத்தில் நடிப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது. மோகன்ராஜா, வினோத் என பல பெயர்கள் அடிபடுகின்றன. நடுவில் நானும் இருக்கிறேன் என்று ஏ.எல்.விஜய் ஆஜர் தந்தார். தலைவா பார்ட் 2 வில் விஜய்யை நடிக்க வைப்பது அவரது திட்டம்.

சமீபத்திய தகவல், இயக்குனர் அமீர் விஜய்யிடம் கதை கூறியுள்ளார். பருத்தி வீரனின் போதே கண்ணபிரான் என்ற கதையை இயக்க உள்ளதாகவும், அது பத்து பருத்தி வீரனுக்கு சமம் என்று கூறிவந்தார் அமீர். அந்தக் கதையைத்தான் விஜய்யிடம் அவர் கூறியிருக்கிறாராம்.
DVu9XCFU0AAxEag
விஜய்யின் 63 வது படத்தை யார் இயக்குவார்கள் என்ற கேள்வி நாளுக்குநாள் சுவாரஸியமாகிக் கொண்டு வருகிறது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்