விஜய்யின் புதிய படத்தில் இடம்பெறும் காமெடியன்

0
303
Vijay

விஜய்யின் மெர்சல் படத்தில் இடம்பெற்ற காமெடியன் ஒருவர் விஜய்யின் புதிய படத்திலும் நடிக்கிறார்.

எம்ஜிஆர் படங்கள் வெற்றி பெற்றதற்கு அவர் எவ்வளவு காரணமோ அதேயளவு நாகேஷும் காரணம். அதுபோல்தான் மற்ற ஹீரோக்களின் படங்களும். காமெடியன் வெயிட்டாக இருந்தால்தான் படம் ஓடும்.

விஜய் படங்களில் காமெடி எப்போதும் தூக்கலாக இருக்கும். மெர்சலில் வளர்ந்துவரும் காமெடி நடிகர் யோகி பாபு இடம்பெற்றார். ஆனால் சின்ன வேடம். ஆனால், முருகதாஸ் இயக்கும் அடுத்தப் படத்தில் யோகி பாபு முக்கிய வேடத்தில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

வடிவேலு சந்தானத்துக்குப் பிறகு பார்த்தாலே சிரிப்பு வரவைக்கிற காமெடியனாக யோகி பாபு மட்டுமே இருக்கிறார் என்பது முக்கியமானது.

இதையும் படியுங்கள் : ஆர்கே நகர்: அதிமுக வேட்பாளர் யார்? அறிவிப்பதில் தாமதம் ஏன்?

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்