விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘பிகில்’ படத்தின் டிரெய்லர் அக்டோபர் 12-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் ‘பிகில்’. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படம் தீபாவளித் திருநாளை முன்னிட்டு வெளியாகவுள்ளது. நயன்தாரா, கதிர், இந்துஜா உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்துள்ள இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

தற்போது அக்டோபர் 12-ம் தேதி மாலை 6 மணிக்கு ‘பிகில்’ டிரெய்லர் வெளியிடப்படும் எனப் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. படத்தை தணிக்கை செய்வதற்காக, படக்குழு மும்முரமாக பணிபுரிந்து வருகிறது. ‘பிகில்’ படத்தை அக்டோபர் 25-ம் தேதி வெளியிடலாம் என ஆலோசனை செய்து வருகிறது படக்குழு.

‘பிகில்’ படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் விஜய். இந்தப் படத்தை சேவியர் பிரிட்டோ தயாரித்து வருகிறார்.