விஜய்யின் சர்காரை நோக்கிவரும் தனுஷின் தோட்டா?

0
366

வருகிற தீபாவளிக்கு விஜய்யின் சர்கார் ஸோலோவாக வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், போட்டிக்கு தனுஷ் படமும் வெளிவர வாய்ப்புள்ளதாக கோடம்பாக்கம் பரபரக்கிறது.

தீபாவளிக்கு சர்காருடன் அஜித்தின் விஸ்வாசம், சூர்யாவின் என்ஜிகே ஆகியவையும் போட்டியில் இருந்தன. திரையுலக வேலைநிறுத்தத்தால் வேலைகள் பாதிக்கப்பட, 2019 பொங்கலுக்கு விஸ்வாசத்தை வெளியிடுவதாக முறைப்படி அறிவித்தனர். என்ஜிகே படப்பிடிப்பும் தள்ளிப் போனதால் அந்தப் படம் தீபாவளிக்கு வரப்போவதில்லை என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. சர்கார் தனியாக வெளியாகும் என நினைத்த நேரத்தில் புது பரபரப்பு.

கௌதம் பல வருடங்களாக எடுத்துவரும் தனுஷின் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தை தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டிருப்பதாக இன்று தகவல் வெளியானது. தனுஷுடன் மேகா ஆகாஷ், ராணா, கௌரவ வேடத்தில் சசிகுமார் நடித்துள்ள அப்படத்துக்கு தர்புகா சிவா இசையமைத்துள்ளார். இரு பாடல்கள் வெளியாகி ஏற்கனவே சூப்பர் ஹிட்டாகியுள்ளன.

சர்காருடன் தீபாவளிக்கு எனை நோக்கி பாயும் தோட்டா பாயுமா என்பது இன்னும் சில தினங்களில் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here