விஜய்சேதுபதியின் ‘மாமனிதன்’ ; இளையராஜா குரலில் தட்டிப்புட்டா பாடல் வெளியீடு

0
273

இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள திரைப்படம் மாமனிதன் . தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை தொடர்ந்து விஜய் சேதுபதியுடன் சீனு ராமசாமி இணையும் படம் இது.

இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக காய்த்ரி நடித்துள்ளார். இந்த படத்திற்கு முதன் முதலாக இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இணைந்து இசையமைத்துள்ளனர்.

யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு 2019-ம் ஆண்டே முடிவடைந்த நிலையில், ஒரு சில காரணங்களால் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டிருந்தது.

முதல் முறையாக ஆட்டோ ஓட்டுநராக நடித்துள்ளார் விஜய் சேதுபதி. குரு சோமசுந்தரம், பேபி மானஸ்வி, அனிகா ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளார்கள்.

இந்நிலையில் படத்தின் முதல் பாடல் தட்டிப்புட்டா பாடல் வெளியாகியுள்ளது. இசைஞானி இளையராஜா பாடிய இந்த பாடல் வரிகளை பா.விஜய் எழுதியுள்ளார். மைனா சுகுமார் படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here