விஜய்நடிப்பில்உருவாகியுள்ளபடம்பிகில்.இந்தப் படத்தில் விஜய் அப்பா, மகன் என்ற இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.  அட்லீ இத் திரைப்படத்தை  இயக்குகிறார். முழுக்க முழுக்க பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாகி உள்ளது இந்தப் படம். விஜய்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.

இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் தயாரித்திருக்கும் 
இந்தப் படத்திலிருந்து இது வரை இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

தீபாவளிக்கு வெளியாகும் இத்திரைப் படம் குறித்த அப்டேட்ஸ் செப்டம்பர் மாதம் முழுக்க வெளியாகும் என்றும் படக் குழு அறிவித்திருந்தது.

படத்தின் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் 19
ஆம் தேதி நடைபெற உள்ளதாக கூறப்படும் நிலையில், இந்தப் படத்தின் தெலுங்கு உரிமத்தை மகேஷ் கோனேரு மற்றும் ஈஸ்ட் கோஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பெற்றுள்ளதாகவும், ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் பிகில் திரைப்படம் 400 திரையரங்குகளில் வெளியாக இருப்பதாகவும் படக் குழு அறிவித்துள்ளது.