விசா மோசடி செய்து அமெரிக்காவில் தங்கிய 129 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். போலியான பல்கலைக் கழகத்தை பதிவு செய்துவிட்டு அவர்கள் அமெரிக்காவில் தங்கியிருந்தது போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அமெரிக்காவில் விசா மோசடிகள் அதிகரித்து வருவதை தொடர்ந்து, அதனை தடுப்பதற்கு போலிப் பல்கலைக்கழகம் ஒன்றை போலீசார் ஆரம்பித்தனர். இந்தப் பல்கலைப்பழகத்தில் நடத்தப்படும் பாடங்கள் சட்டவிரோதமானவை என்று தெரிந்தும் அதில் பல மாணவர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்து விசா மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதைத்தொடர்ந்து போலிப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்த மாணவர்களை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 130 பேரில் 129 பேர் இந்தியர்கள் என்று தெரியவந்துள்ளது.
இதனிடயே, கைது செய்யப்பட்ட இந்திய மாணவர்களை மீட்க மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக அமெரிக்காவில் 24 மணி நேரமும் செயல்படும் இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கைதான மாணவர்களின் பெற்றோர்கள் தொடர்பு கொள்ள தனிப் பிரிவையும் வெளியுறவுத்துறை அமைச்சகம் ஏற்படுத்தி உள்ளது. மேலும் cons3.washington@mea.gov.in என்ற இமெயில் முகவரியிலும் பெற்றோர்கள் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here