விக்ரம் 58 – பர்ஸ்ட் லுக் வெளியானது

0
131


விக்ரமின் 58 வது படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. அஜய் ஞானமுத்து இந்தப் படத்தை இயக்குகிறார்.

கமல் தயாரிப்பில் விக்ரம் நடித்துள்ள கடாரம் கொண்டான் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. கௌதம் இயக்கத்தில் நடித்த துருவ நட்சத்திரம் எப்போது வெளியாகும் என்பது கௌதமுக்கே தெரியாத நிலை. இவை தவிர மலையாள இயக்குநர் ஆர்எஸ் விமல் இயக்கத்தில் மகாவீர் கர்ணா புராணப் படத்தில் விக்ரம் நடிக்கிறார். மணிரத்னத்தின் பொன்னியின் செல்வனிலும் நடிக்க உள்ளார். 

இந்நிலையில், புதிய படம் ஒன்றை கமிட் செய்துள்ளார். டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்துவின் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கிறார். லலித் குமார் தயாரிக்கும் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது. ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பை தொடங்கி அடுத்த வருடம் ஏப்ரலில் படத்தை வெளியிடுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here