‘விக்ரம் – வேதா’ படத்தின் இந்தி ரீமேக்கில், ஷாரூக் கான் நடிக்கவிருப்பதாக இருந்த நிலையில், தற்போது வேறு நடிகர்கள் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மாதவன், விஜய் சேதுபதி, ஸ்ரத்தா ஸ்ரீநாத், வரலட்சுமி நடிப்பில் தமிழில் ரிலீஸாகி சூப்பர் ஹிட்டான படம் ‘விக்ரம் வேதா’. புஷ்கர் – காயத்ரி இயக்கிய இந்தப் படத்தை, ஒய் நாட் ஸ்டுடியோஸ் சார்பில் சஷிகாந்த் தயாரித்தார். இந்தப் படம் இந்தியில் ரீமேக் ஆகிறது. ரிலையன்ஸ் என்டெர்டெயின்மென்ட் மற்றும் பிளான் சி ஸ்டுடியோஸ் ஆகியோருடன் இணைந்து சஷிகாந்த் தயாரிக்கிறார்.

இந்நிலையில்,‘விக்ரம் வேதா’படத்தைப் பார்த்த ஷாரூக், இந்தி ரீமேக்கில் நடிக்க சம்மதம் தெரிவித்திருந்தார். அவர் விஜய் சேதுபதி நடித்திருந்த வில்லன் கேரக்டரில்நடிக்க விருப்பம் தெரிவித்தார். ஆனால் தயாரிப்பு நிறுவனம் அவரை மாதவன் கேரக்டரில் நடிக்குமாறு கேட்டுக் கொண்டதோடு இந்தப் படத்தை அவரே இயக்கி நடிக்கவும் பேச்சுவார்த்தை நடந்தது. இந்நிலையில், கதையில் சில மாற்றங்கள் செய்ய ஆலோசிக்கப் பட்டதில்ஏற்பட்ட கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் ஷாரூக் விலகிவிட்டார்.

இதனால் வேறு சில ஹீரோவிடம் பேசி வந்தனர். ஹிர்த்திக் ரோஷனும் சஞ்சய் தத்தும் நடிப்பதாக செய்தி வெளியானது. மாதவன் நடித்த கேரக்டரில் சஞ்சய் தத்தும் விஜய் சேதுபதி வேடத்தில் ஹிர்த்திக் ரோஷனும் நடிப்பதாகக் கூறப்பட்டது. பின்னர்அதுவும் கைவிடப்பட்டது.

தற்போது, இவர்களுக்குப் பதிலாக ஆமிர்கானும் சைஃப் அலிகானும் நடிக்க இருக்கிறார்கள் என்றும் தமிழில் இயக்கிய புஷ்கர் காயத்ரியே இந்தியிலும் இயக்க இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. மாதவன் கேரக்டரில் சைஃப் அலிகானும் விஜய் சேதுபதி கேரக்டரில் ஆமிர்கானும் நடிக்க உள்ளனர்.