விக்ரம் பிரபுக்கு ஜோடியான ஹன்சிகா

0
187
Hansika Motwani

வாய்ப்புகள் சுத்தமாக இல்லாத நிலையில் விக்ரம் பிரபுக்கு ஜோடியாக நடிக்கிறார் ஹன்சிகா.

பிரபுதேவா இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த எங்கேயும் காதல் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் ஹன்சிகா. ஆரம்பம் சுமாராக இருந்தாலும் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் வெற்றிக்குப் பிறகு பிஸியான நடிகையானார். விஜய்யின் வேலாயுதம், புலி படங்களில் நடித்தார். கடைசியாக அவர் நடித்தது ஜெயம் ரவியின் போகன்.

அழகு, திறமை இருந்தும் தமிழில் ஹன்சிகாவுக்கு சுத்தமாக வாய்ப்பில்லை. இப்போது விக்ரம் பிரபு ஜோடியாக துப்பாக்கி முனை படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். தினேஷ் செல்வராஜ் இயக்கும் இந்தப் படத்தை தாணு தயாரிக்கிறார்.

படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கி முழுவீச்சில் நடந்து வருகிறது.

இதையும் படியுங்கள்: H1B விசா ஏற்படுத்திய தாக்கம்; லாபத்தைச் சம்பாதித்துக் கொடுத்த இந்திய ஐடி நிறுவனங்கள் இவை

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்