வாவ்… கலகலப்பு 2 படத்தின் விற்பனை எவ்வளவு தெரியுமா?

0
429

சுந்தர் சி. தயாரித்து இயக்கியிருக்கும் கலகலப்பு 2 படத்தின் தமிழக திரையரங்கு விநியோக உரிமையை விநியோகஸ்தர் சாய் வாங்கியுள்ளார். இந்த ஒரு உரிமை மூலமே சுந்தர் சி. பல கோடிகள் லாபம் பார்த்துள்ளது முக்கியமானது.

நான் மினிமம் கியாரண்டி இயக்குனர் என்று அறிவித்தவர் சுந்தர் சி. வெகுஜனங்களுக்குப் பிடிக்கிற வகையில் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் தந்து அவர் இயக்கும் படங்கள் பெரும்பாலும் தோல்வி அடைவதில்லை. அவரது கலகலப்பு பெரும் லாபத்தை தந்த படம்.

கலகலப்பு 2 படத்தை ஜீவா, ஜெய், சிவா, நிக்கி கல்ராணி, கேதரின் தெரேசா ஆகியோரை வைத்து எடுத்துள்ளார். சுந்தர் சி. படத்துக்கு, வழக்கமாக வாங்குகிற சம்பளத்தைவிட மிகக்குறைவான சம்பளத்தை இந்த நட்சத்திரங்கள் பெற்றிருக்கிறார்கள். படத்தின் பட்ஜெட் 7 முதல் 8 கோடிகள் இருக்கலாம் என்கிறது படக்குழு.

இந்தப் படத்தை தேனாண்டாள் ஸ்டுடியோஸ் வாங்குவதாக கூறப்பட்டது. தற்போது படத்தின் தமிழக திரையரங்கு விநியோக உரிமையை விநியோகஸ்தர் சாய் வாங்கியுள்ளார். சுமார் 11 கோடிகள் தந்து இந்த உரிமையை அவர் கைப்பற்றியுள்ளார்.

தமிழக திரையரங்கு உரிமையைத் தவிர வெளிநாட்டு உரிமை, ஆடியோ உரிமை, டிஜிட்டல் உரிமை, தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை, இந்தி டப்பிங் டிஜிட்டல் உரிமை என பல வழிகளில் படம் சம்பாதிக்க உள்ளது. இவையனைத்தும் சேர்த்து குறைந்தது 10 கோடிகளாவது சுந்தர் சி.க்கு லாபம் கிடைக்கும் என கூறப்படுகிறது.

சுந்தர் சி.யிடமிருந்து இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் கற்றுக் கொள்ள நிறைய உள்ளது.

இதையும் படியுங்கள்: ’டீ, ஸ்நாக்ஸ் செலவு 68.59 லட்சம் ரூபாய்’: சர்ச்சையில் சிக்கிய உத்தரகாண்ட் முதல்வர்

இதையும் படியுங்கள்: ஞாநி

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்