ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய வாழ்வில் பிறை தரிசனம் செய்ய வேண்டும் என்று நம் தெய்வம் மகா பெரியவா அவர்கள் சொல்லி இருக்கிறார்கள். பிறை தரிசனம் செய்தால் வாழ்வில் எல்லா  வளங்களும்; நலன்களும் நம்மை வந்தடையும் என்பது நிதர்சனமான உண்மை. வாழ்வில் ஏற்றம் பெற பிறை தரிசனம் அவசியம்.

பிறை தரிசனம் என்றால் என்ன செய்ய வேண்டும். எப்பொழுது செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம்.

அமாவாசை திதிக்கு பிறகு வரும் துவிதியை திதி அன்று சந்திர தரிசனம் செய்ய ஆரம்பிக்க வேண்டும். இது தான் மூன்றாம் பிறை தரிசனம் ஆகும். திருதியை திதி அன்று சந்திரனை  தரிசனம் செய்ய கூடாது. பின்னர் சதுர்த்தி  திதி அன்று ஆரம்பித்து பௌர்ணமி வரை தரிசனம் செய்ய வேண்டும்.

இப்படி தரிசனம் செய்யும் போது ஒவ்வொரு நாள் தரிசனத்திற்கும்  ஒவ்வொரு பலன் உண்டு. அப்படி தரிசனம் செய்வதால் என்ன பலன்களை அடையலாம் என்பதை பற்றி பார்ப்போம்.

3 – ம் பிறையை தரிசித்தால் அறிவு பலம் பெறும். கல்வியில் மேன்மையான நிலையை அடையலாம்.

4  – ம் பிறையை தரிசித்தால் மறதி அதிகமாகும். அதனால் தான் 4 – ம் பிறையை தரிசனம் செய்ய கூடாது.

5 – ம் பிறையை தரிசித்தால் ஆண்டியும் அரசனாகும் அளவு செல்வம் கிடைக்கும்.

6 – ம் பிறையை தரிசித்தால் திருமண தடைகள் நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும்.

7 – ம் பிறையை தரிசித்தால் எப்படி பட்ட கடனும் தீரும்.

8 – ம் பிறையை தரிசித்தால் அளவில்லாத செல்வம் கிட்டும்

9 – ம் பிறையை தரிசித்தால் ஆபரண சேர்க்கை உண்டு.

10 – ம் பிறையை  தரிசித்தால் புத்திர பாக்கியம் பெறலாம்.

11 – ம்  பிறையை தரிசித்தால் செய்யும் தொழிலில் வளர்ச்சி, மற்றும் உத்தியோகத்தில் பதவி உயர்வு பெற முடியும்.

12 – ம் பிறையை தரிசித்தால்  வம்சமானது விருத்தியாகும்.

13 – ம் நாள் பிரதோஷம் அன்று சந்திரனை தரிசனம் செய்வதால் நம்முடைய கர்ம வினைகள் நீங்கும்.

சிவராத்திரி அதாவது சதுர்த்தசி திதி  அன்று சந்திரனை  தரிசித்தால் சிவனையே  தரிசனம் செய்த பலன் கிடைக்கும்.

பௌர்ணமி அன்று சந்திரனை தரிசித்தால் வாழ்வில்  எல்ல வளங்களும் கிடைக்கும். நோய்கள் நீங்கும். எம பயம் அகலும்.

வாழும் காலம் முழுதும் சந்திர தரிசனம் செய்தால் முக்தி நிச்சயம். மீண்டும் பிறவாமை வேண்டும் என்பவர்கள் இந்த தரிசனத்தை  தொடரலாம்.

பிறையை தரிசித்தல் என்பது சிவனையே தரிசனம் செய்ததற்கு ஒப்பாகும்.

சந்திரனை தரிசிப்போம், வாழ்வில் ஏற்றம் பெறுவோம் நம் சந்ததியினருக்கும் இந்த தரிசனத்தை சொல்லி கொடுத்து அவர்கள் வாழ்வும் ஏற்றம் பெற செய்வோம்.

பிறை தரிசனம் – இறை தரிசனம்.

குருவே துணை.

நன்றி : ஆஸ்ட்ரோலக்ஷ்மி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here