இன்று வாழைப்பழ கப் கேக்கை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம். வீட்டிலேயே செய்யலாம் வாழைப்பழ கப் கேக்.

தேவையான பொருட்கள் : 

பேப்பர் கப் – தேவைக்கேற்ப (5 அல்லது 6)

 உப்பு – 1ஃ4 டீஸ்பூன்

கோதுமை மாவு – 150 கிராம்

நாட்டு சர்க்கரை – 100 கிராம்

வாழைப்பழம் – 2 (பெரியது, பழுத்தது)

வெண்ணெய் – 75 கிராம்(உருக்கி ஆற வைத்துக் கொள்ளவும்) 

வாழைப்பழம் எசென்ஸ் (அல்லது) 1 டீஸ்பூன்

வெனிலா எசென்ஸ் – தேவைக்கேற்ப (1
டீஸ்பூன் அல்லது 1 1ஃ2)

முட்டை: 1 (பெரியது) .   

செய்முறை : 

ஒரு பாத்திரத்தில் வாழைப்பழத்தை போட்டு நன்கு மசித்துக் கொள்ளவும். 

பின் அதில் நாட்டு சர்க்கரை சேர்த்து எலக்ட்ரிக் பீட்டர் கொண்டு கலக்கவும். 

பிறகு அதில் முட்டை, வெண்ணெய் சேர்த்து கலக்கவும்.  

பின் முட்டை பீட்டர்  கொண்டு கோதுமை மாவு, உப்பு, பேக்கிங் சோடா, வெனிலா எசென்ஸ் சேர்த்து நன்கு கலந்து பிறகு அந்த கலவையை சிலிக்கான் கப் அல்லது மஃபின் டிரேயில் பேப்பர் கப் வைத்து 200 C யில் 10 நிமிடங்கள் ஃப்ரீஹீட் செய்யப்பட்ட அவனில் 15-20 நிமிடங்கள் 150 C யில் பேக் செய்யவும்.  பிறகு அதை எடுத்து சூடாகவோ ஆறிய பின்போ பரிமாறலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here