வாழைப்பழம்…எடை கூடுமா?

0
397

வாழைப்பழம் சாப்பிட்டால் எடை அதிகரிக்கும். அதனால் குண்டாகிவிடுவார்கள் என்கிற கருத்து பலரிடம் உள்ளது. இதை நம்பிக் கொண்டு வாழைப்பழம் சாப்பிடுவதைத் தவிர்க்கின்றனர். ஆனால் இது உண்மையல்ல. வாழைப்பழத்தில் கொழுப்பு கிடையாது. இதைத் தவிர, 100 கலோரிகள் மட்டுமே வாழைப்பழத்தில் உள்ளது. 

ஆகவே எடை கூட வாய்ப்பே இல்லை. வாழைப்பழத்தில் ஸ்டார்ச் (ஆர்.எஸ்.) 4.7 கிராம் உள்ளது. இது நீண்ட நேரம் பசியைத் தடுக்கும். அதிக உணவு சாப்பிடும் ஆர்வத்தை வாழைப்பழத்தில் உள்ள ஸ்டார்ச் தடுக்கிறது. அதன் கார்போஹைட்ரேட் காரணமாக அளவோடு உணவு சாப்பிட்டு ஸ்லிம்மாக இருக்க முடியும்.

 ஒட்டு மொத்த உடல் இயக்கத்துக்கு வாழைப்பழம் உதவுகிறது. உணவின் கால்சியம், மக்னீசிய சத்துக்களை உடலில் முழுமையாகச் சேர்க்கிறது.

 ஆப்பிளுடன் ஒப்பிட்டால், ஒரு வாழைப்பழத்துக்கு 4 ஆப்பிள்கள் சமம். ஏனெனில் ஆப்பிளை விட புரோட்டின், கார்போஹைட்ரேட்ஸ், பொட்டாசியம், வைட்டமின் சி, இரும்பு, பாஸ்பரஸ் ஆகியவை அதிகம். எனவே தினமும் 2 வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் இளமை, ஆரோக்கியம் நிச்சயம். மனித ஆரோக்கியத்தில் வாழைப்பழத்தின் பங்கு பற்றி டெல்லியைச் சேர்ந்த உணவியல் நிபுணர்கள் சிலர் நடத்திய ஆய்வின் மூலம் இது தெரிய வந்துள்ளது.
 

ஏற்காடு இளங்கோ எழுதிய “நம்பிக்கைகள் எல்லாம் அறிவியல் அல்ல’ என்ற நூலிலிருந்து…

Courtesy: DN

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here