இந்துமத காவியமான இராமாயணத்தின் ஆசிரியர் வால்மீகி குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களைக் கூறியதாகத் தொடரப்பட்ட வழக்கில் நடிகை ராக்கி ஷாவந்த்தைப் பஞ்சாப் போலீசார் கைது செய்ததாக தகவல் வெளியானது. ஆனால் இதனை பஞ்சாப் போலீசார் மறுத்துள்ளனர்.

வால்மீகி குறித்து தரக்குறைவான கருத்துக்களைக் கூறி இந்துமத உணர்வுகளைப் புண்படுத்தியதாக நடிகை ராக்கி ஷாவந்த் மீது தொடுத்த வழக்கில் அவர் ஆஜராகாததால், மார்ச் 9ஆம் தேதி லூதியானா நீதிமன்றம் கைதுவாரண்ட் பிறப்பித்தது. நரிந்தர் அதியா என்ற வழக்கறிஞர் கடந்த 2016ஆம் ஆண்டு ஜூலை மாதம் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் சாவந்த் தவறான கருத்துக்களை பேசியதாகப் புகார் அளித்திருந்தார்.

நடிகை சாவந்த் ஒரு தனியார் தொலைக்காட்சியில் பேசும் போது, “வால்மீகி ஒரு கொலைகாரர். பின்னர் இராமாயணத்தின் ஆசிரியராகியுள்ளார் என கூறினார். பின்னர் 2014ஆம் ஆண்டு அவரது பிறந்தநாள் விருந்தின்போது அவருக்கு வலுக்கட்டாயமாக முத்தமிட்ட பாடகர் மிகா சிங்குடன் வால்மீகியை ஒப்பிட்டு பாடகர் இந்துமத முனிவரை போன்று மாறிவிட்டர்” என கூறினார்.

இது தொடர்பான வழக்கில் நடிகை ராக்கியைப் பஞ்சாப் போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் இதனை பஞ்சாப் போலீசார் மறுத்துள்ளனர்.

இதையும் படியுங்கள் : உறுதியானது அருண் விஜய், மகிழ்திருமேனி கூட்டணி

இதையும் படியுங்கள் : விஜய் அரசியலுக்கு வரமாட்டார் – எஸ்.ஏ.சந்திரசேகரன் சத்தியம்

இதையும் படியுங்கள் : ”என்னைக் கைது செய்து சிறைக்கு அனுப்புங்கள்”: ஆவேசமடைந்த நீதிபதி கர்ணன்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்