பிளிப்கார்ட் நிறுவனத்தின் 77 சதவீத பங்குகளை, அமெரிக்காவின் வால்மர்ட் நிறுவனம் வாங்கியுள்ளது . இதன் மூலம் இந்திய அரசுக்கு வருமான வரியாக 10 ஆயிரம் கோடி ரூபாய் விரைவில் வரும் என தெரிகிறது.

அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான், உலகின் பல நாடுகளிலும் தன் வர்த்தகத்தை பலப்படுத்திவருகிறது. அமேசான், பிளிப் கார்ட்டை வாங்க நடவடிக்கை எடுத்தது.

ஆனால் அதற்கு முன்பு அமேசானின் போட்டி நிறுவனமான, வால்மர்ட்டும் பிளிப் கார்ட்டுடன் பேச்சுவார்த்தையை தொடங்கியது. இதற்கான பேச்சுவார்த்தை பல நாட்களாக நடந்து பின், பிளிப்கார்ட் நிறுவனத்தின் 77 சதவீத பங்குகளை வால்மார்ட் வாங்கியது.

பிளிப் கார்ட்டின் சொத்து மதிப்பு சுமார் 1 லட்சத்து 47 ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் 77 சதவீத பங்குகளை வாங்க வால்மார்ட் ஒப்புக் கொண்டுள்ளது. எனவே சுமார் ஒரு லட்சத்து 7 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் இந்தியாவின் பிளிப் கார்ட் நிறுவனத்தை வாங்கியதன் காரணமாக, வால்மார்ட் நிறுவனம் 10 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இந்திய அரசுக்கு வரி கட்ட வேண்டும்.

பிளிப் கார்ட் பங்குகளை வாங்கியதால் இந்திய அரசுக்கு செலுத்த வேண்டிய 10 ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை செலுத்த தயார் என வால்மார்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கான நடவடிக்கையை எடுக்குமாறு அந்த நிறுவனத்தின் வரி கண்காணிப்பு பிரிவு அதிகாரிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

(இந்தச் செய்தி பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது )

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்