தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்கக் கடலை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காணப்படுவதால் தமிழத்தின் பல பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையைப் பொறுத்தவரையில், வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்: துல்லியம், நியாயம், ஆதாரம்: ஊடகவியலின் அடிப்படைகள்

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக வால்பாறையில் 9.2 மிமீ மழை பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து பாளையங்கோட்டையில் 9.0 மிமீ மழையும், உதகமண்டலத்தில் 5.6 மிமீ மழையும், தூத்துக்குடியில் 1.4 மிமீ மழையும் பதிவாகியுள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக பாளையங்கோட்டையில் 34.4; மதுரையில் 33.3; கன்னியாகுமரியில் 32.5 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.

இதையும் படியுங்கள்: டாக்டர் விஜய்… வெளிவந்த மெர்சல் ரகசியம்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்