பாகுபலி திரைப்படத்தில் வருவதுபோன்று யானையின் தந்தங்களைப் பிடித்து ஏற முயன்ற இளைஞரை, யானைத் தாக்கியது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கேரள மாநிலம் தொடுபுழாவில் இளைஞர் ஒருவர், வளர்ப்பு யானையிடம் பாகுபலி திரைப்படத்தில் வருவதுபோல யானையின் தந்தங்களைப் பிடித்து ஏற முயன்றார். அப்போது திடீரென அந்த யானை, இளைஞரைத் தூக்கி வீசியது.

அந்தவேளையில், யானை மிரண்டு அவரை தூக்கி வீசியது. இதில் பலத்த காயமடைந்த அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

Source: Manorama online

இதையும் படியுங்கள்: துல்லியம், நியாயம், ஆதாரம்: ஊடகவியலின் அடிப்படைகள்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்