வாராணசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் போட்டியிடுவாரா, மாட்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்துடன் மோடி வெற்றி பெற்றிருந்தார்.

இந்த முறை மோடி ஒடிஸா மாநிலம் பூரி மக்களவைத் தொகுதியில் இருந்து போட்டியிடக்கூடும் என்று கூறப்படுகிறது.


2014 மக்களவைத் தேர்தலில், மோடியின் சொந்த மாநிலமான குஜராத்திலுள்ள வடோதரா, உத்தரப் பிரதேசத்திலுள்ள வாராணசி ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றார். வடோதரா தொகுதியில் அதிக வித்தியாச வாக்குகளில் வெற்றி பெற்றார். வாராணசியில் எதிர்க்கட்சி வேட்பாளராகக் களமிறங்கிய ஆம் ஆத்மி கட்சித் தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலை 1,79,739 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார் நரேந்திர மோடி.


 வாராணசி தொகுதியில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து கங்கையை சுத்தமாக்கும் பல திட்டங்களை அறிவித்தார். கங்கை சுத்தமாகியதா என்றால் அது வேறு விஷயம் . நடைபெறப் போகும் 2019 மக்களவைத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி வாராணசி தொகுதியில் போட்டியிட மாட்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன .

2014 மக்களவைத் தேர்தலில் பீகார் மாநிலம் பாட்னா சாஹிப் தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்ற நடிகர் சத்ருகன் சின்ஹா, அவர் பாஜகவைல் இருந்துக் கொண்டே பாஜக கடுமையாக விமர்சித்து வருபவர் அதனால் அவர் பாஜகவில் இருந்து விலகக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

சமாஜ்வாடி கட்சியின் ஆதரவுடனோ அல்லது சுயேச்சை வேட்பாளராகவோ அவர் வாராணசியில் பிரதமரை எதிர்த்துப் போட்டியிடப் போவதாக ஏற்கெனவே அறிவித்திருக்கிறார். “பனாரசி பாபு’ திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த சத்ருகன் சின்ஹா வாராணசி பகுதிகளில் பிரபலமானவர் என்பது மட்டுமல்லாமல், அவர் சார்ந்த சாயத்ஸ் சமூகத்தினர் அந்தத் தொகுதியில் கணிசமாக இருக்கிறார்கள்.


2016-இல் நடந்த உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆனால், அதற்குப் பிறகு நடந்த அத்தனை மக்களவை, இடைத்தேர்தல்களிலும் ஆளும் பாஜக தொடர்ந்து தோல்வியைத் தழுவியது.

மேலும் உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சியும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும், அஜித் சிங்கின் ராஷ்ட்ரீய லோக்தளமும், காங்கிரஸும் பாஜகவுக்கு எதிராக “மெகா’ கூட்டணி அமைத்துப் போட்டியிடும் முயற்சியில் இறங்கி இருக்கின்றன.


இதனால் மோடி உத்தரப் பிரதேசத்தில் போட்டியிடுவது சரியானது அல்ல என்று பாஜக தலைமை கருதுவதாகக் கூறப்படுகிறது.
பிரதமர் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு அதில் ஒரு தொகுதியில் தோல்வி அடைந்தாலும், அது மிகப் பெரிய பின்னடைவாக இருக்கும் . அதனாலேயே இந்த முடிவு என்று கூறப்படுகிறது .


குஜராத்தில் மட்டும் போட்டியிடுவது அல்லது குஜராத்திலும், ஒடிஸா மாநிலம் பூரி தொகுதியிலும் மோடி போட்டியிடக்கூடும் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Courtesy: The Indian Express

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here