கடந்த சில தினங்களாக ஸ்ரீதிவ்யாவின் கவர்ச்சிப் படம் ஒன்று வைரலாகி வருகிறது.

ஸ்ரீதிவ்யா நடிக்கிறாரோ இல்லையோ, நாலு படம் எப்போதும் அவர் கைவசம் இருக்கும். ஆனால், இந்த வருடம் நிலைமை தலைகீழ். ஸ்ரீதிவ்யாவை தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது. அவருக்கு அபயம் தந்த சிவகார்த்திகேயன், நயன்தாரா, சமந்தா என்று எட்டா உயரத்தில் றெக்கைக்கட்ட அடைக்கலம் தர ஆளில்லை ஸ்ரீதிவ்யாவுக்கு.

இதன் காரணமாக ஸ்ரீதிவ்யா கவர்ச்சிக்கு மாறியிருப்பதாக சில புகைப்படங்களை மீடியாக்கள் வெளியிட்டுள்ளன. தனது கோம்லி முகத்துக்கு கொஞ்சமும் பொருந்தாதா உடையில் சுரைக்காய்க்கு சூட் மாட்டியதுபோல் இதில் காணப்படுகிறார் ஸ்ரீதிவ்யா. உண்மையிலேயே ஸ்ரீதிவ்யா கவர்ச்சிக்கு மாறிவிட்டாரா?

DfPGEPpUcAEDV6g

படவாய்ப்பு இல்லாததால் கதைக்கு தேவைப்படுகிறது அளவுக்கு கவர்ச்சி காட்ட ஸ்ரீதிவ்யா தயார். ஆனால், மீடியாக்கள் வெளியிட்ட புகைப்படம் இப்போது எடுத்ததில்லை. அவர் ஆரம்பத்தில் நடித்த காட்டு மல்லி காலத்தில் எடுத்த புகைப்படங்களாம்.

சினிமாவில் தூங்குவதாக இருந்தாலும் காலாட்டிக் கொண்டே தூங்க வேண்டும். இல்லையெனில் இப்படி ஏடாகூடமாக ஏதாவது செய்தியைப் போட்டு பீல்டிலிருந்தே துரத்தியடிப்பார்கள்.

ஆமா… ஸ்ரீதிவ்யா மேடம் எங்கே இருக்கீங்க?

இதையும் படியுங்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here