வாயுத்தொல்லை நீங்க, பால் கெடாமல் இருக்க : மேலும் சில குறிப்புகள்

Healthy recipes and cooking tips for making your favourite meals more nutritious but just as delicious.

0
690

1. பஜ்ஜி செய்யும்போது சிறிதளவு கடலைப் பருப்பு, அரிசி, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை ஊறவைத்து அரைத்து, பெருங்காயம் சேர்த்து செய்தால் வித்தியாசமான சுவையுடன் இருக்கும்.

2. இனிப்புகள் செய்யும்போது, உதிர்ந்தவற்றை எல்லாம் சேர்த்து பால், மில்க் மெய்ட் கலந்து பாயசம் செய்யலாம்.

3. தேங்காய் பர்பி செய்யும்போது, தேங்காயை முதலில் சேர்க்காமல், சர்க்கரை கம்பிப் பாகு வந்த பின் சேர்த்தால் சீக்கிரம் கெட்டியாகும்.

4. உளுந்து மாவுடன், ஜவ்வரிசியை வெறும் வாணலியில் வறுத்துப் பொடி செய்து பலகாரம் செய்தால் கரகரப்பாக இருக்கும்.

5. வீட்டில் தயாரிக்கும் ஜாம் வெகு நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்க, அதனுடன் ஒரு டீஸ்பூன் இஞ்சிச் சாறு ஊற்றிக் கலந்துவைக்கலாம்.

6. டீத்தூளுடன் சிறிதளவு சுக்குத் தூளையும், ஏலக்காய்ப் பொடியையும் சேர்த்தால் டீ மணமுடன் இருக்கும்.

7. வாயுத்தொல்லை நீங்க ஓமத்தை லேசாக வறுத்து, அரை பங்கு உப்பும், கால் பங்கு வெல்லமும் சேர்த்து காலை, மாலை சாப்பிட்டுவரலாம்.

8. வெண்ணெயைக் காய்ச்சி இறக்கியதும், அதில் சிறிது வெந்தயத்தைப் போட்டால் நெய் வாசனையாக இருக்கும்.

9. காய்ந்து போன ரொட்டித் துண்டுகளை இட்லிப் பாத்திரத்தில் ஆவியில் சில நிமிடங்கள் வைத்து எடுத்தால் மென்மையாகிவிடும்.

10. ரசம் கொதிக்கும்போது வெண்டைக்காயை நறுக்கிப் போட்டால் ரசம் மணமாக இருக்கும்.

11. நான்கு நெல் மணிகளைக் கழுவிப் பாலில் போட்டு வைத்தால் ஒரு நாள் முழுவதும் கெடாது.

12.துளசி இலையை நன்றாகக் கசக்கி, தண்ணீரில் கொதிக்க வைத்து தினமும் கொப்பளித்து வந்தால்வாய் நாற்றம் நீங்கிவிடும்.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here