‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு நடனமாடிய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனைகள்”

0
295

மாஸ்டர்’ படத்தின் ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு இந்திய கிரிக்கெட் வீராங்கனைகள் வெறித்தனமாக டான்ஸ் ஆடியுள்ளது வைரல் ஆகியுள்ளது

தீபாவளியையொட்டி வெளியான விஜய்யின் ‘மாஸ்டர்’ இப்போதுவரை தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தின் ’வாத்தி கம்மிங்’ பாடல் படம் வெளியாவதற்கு முன்பே இந்தியா முழுக்க வைரல் ஹிட் அடித்தது. படம் வெளியான பின்பு உலகம் முழுக்க இப்போதுவரை ரசிகர்கள் நடனமாடி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

ஏற்கனவே, கிரிக்கெட் வீரர்கள் பலர் வாத்தி கமிங் பாடலுக்கு நடனமாடி வீடியோ வெளியிட்டிருந்த நிலையியில், ’அவர்களுக்கு நாங்களும் சளைத்தவர்கள் இல்லை’ என்பதுபோல, இந்திய மகளிர் கிரிக்கெட் அணியைச் சேர்ந்த வேதா கிருஷ்ணமூர்த்தி, திவ்யா,வனிதா ஆகான்ஷா உள்ளிட்ட வீராங்கனைகள் ’வாத்தி கம்மிங்’ பாடலுக்கு குதுகலத்துடன் நடனமாடி கண்களை கொள்ளைக் கொள்கிறார்கள்.

வேதா கிருஷ்ணமூர்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘சென்னையில் இருக்கும்போது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here