இந்தியாவில் அதிக மக்கள் பயன்படுத்தும் தகவல் பரிமாற்ற செயலியாக வாட்ஸ்அப் உள்ளது. வாட்ஸ் அப் செயலியை கடந்த 2014ஆம் ஆண்டு ஃபேஸ்புக் நிறுவனம் தன் கைவசப்படுத்தியது. உலகம் முழுவதிலும் 1.3 பில்லியனுக்கும் அதிகமானோர் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது வாட்ஸ் அப் பீட்டா வெர்சனில் கொடுக்கப்பட்டுள்ள அப்டேட்டில் பக்(bug) இருப்பதால் போட்டோக்கள் உட்பட சில மீடியா ஃபைல்கள் தானாகவே அழிந்து விடுவதாகக் கூறப்படுகிறது. ஆண்ட்ராய்டின் வாட்ஸ்அப் 2.19.66 பதிப்பில் இந்த குறைபாடு காணப்படுகிறது. மேலும் சில ஸ்டேட்டஸில் உள்ள புகைப்படம் தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது.


எந்த ஒரு அப்டேட்டையும் முதலில் பீட்டா வெர்சன் என்ற சோதனை தளத்தில் பரிசோதிப்பார்கள். அது முழுமையாக வெற்றியடைந்தால் மட்டுமே அனைத்து தளங்களிலும் அதிகாரப்பூர்வமாக அப்டேட் விடப்படும். அதனால் சோதனை தளத்தில் குறைபாடுகள் வருவது சகஜமானது தான் என்று கூறப்படுகிறது.


இந்த குறைபாடு முழுமையாக சரி செய்யப்பட்டே அதிகாரப்பூர்வ அப்டேட்டாக விடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here