வாட்ஸ் அப் பயனாளர்களின் தகவல் தொடர்பான வழக்கு அரசியலமைப்பு சட்ட அமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையும் படியுங்கள் : ”ஆபாச உரையாடல்”: மங்களம் தொலைக்காட்சியின் சிஇஓ உட்பட 5 பேர் கைது

தற்போதுள்ள சூழலில் வாட்ஸ் அப் பயன்படுத்தாத நபர்களின் எண்ணிக்கை மிக குறைவு. இதில் இளைஞர்கள் தொடங்கி முதியவர் வரை பல்வேறு தகவல்களைப் பரிமாறிகொள்கிறார்கள். ஆனால் அதன் பாதுகாப்புத் தன்மை என்பது கேள்விக்குறிய விஷயமாகவே உள்ளது. இந்நிலையில் வாட்ஸ் அப் பயன்படுத்துவோரின் தனிப்பட்ட அந்தரங்க தகவல்கள் பாதுகாப்பில் வாட்ஸ் அப் நிறுவனம் கடந்தாண்டு சில மாற்றங்களைக் கொண்டுவந்தது. அதன்படி வாட்ஸ் அப் பயன்படுத்துவோரின் கைப்பேசி எண் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்கள் முகநூல் பக்கத்தில் இணைக்கவேண்டும் என கூறியது. இது தொடர்பாக வாட்ஸ் அப் நிறுவனம் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பில், வாட்ஸ் அப் சேவையைத் தொடர செப்டம்பர் 25ஆம் தேதிக்குள் முகநூல் பக்கத்துடன் தங்கள் வாட்ஸ் அப்பை இணைத்து கொள்ளவேண்டும் என அறிவித்தது.

இதையும் படியுங்கள் : மாட்டுக்கறி: தெரிந்து கொள்ள வேண்டிய புள்ளி விவரங்கள்

இதனை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை வழக்கறிஞர் ஷர்மா என்பவர் தொடுத்தார். இந்த வழக்கு மீதான விசாரணை புதன்கிழமையன்று தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் மற்றும் நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்றது. இதில் இந்த வழக்கின் விசாரணை கூடுதல் நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கின் விசாரணை வரும் ஏப்ரல் 18ஆம் தேதியன்று நடைபெறும் எனவும் தெரிவித்தனர்.

இதையும் படியுங்கள் : செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லைக்கு யு/ஏ… மே மாதம் வெளியாகிறது

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்