வாட்ஸ் அப் அறிமுகம் செய்த புதிய அப்டேட்

One of WhatsApp’s much-awaited features is finally here for all users.

0
154

வாட்ஸ் அப்-பில் அனுப்பப்பட்ட குறுஞ்செய்திகள் 7 நாட்களில் தானாக டெலிட் ஆகிவிடும் அம்சத்தை  இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

தனிப்பட்ட செய்தி மற்றும் குரூப்புகளிலும் இந்த அம்சத்தைப் பயன்படுத்தலாம் என ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டது.

இந்த அம்சத்தை பயனர் ஒருதனிப்பட்ட சாட்டிற்கு மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். குரூப் செய்திகளுக்கு, அட்மின் மட்டுமே இந்த அம்சத்தை பயன்படுத்த முடியும்.

ஒரு பயனருக்கு செய்தியை அனுப்பி, அவர் 7 நாட்கள் தங்கள் வாட்ஸ்அப்பை பயன்படுத்தவில்லை என்றால், அந்த செய்தி தானாகவே அழிந்துவிடும். எனினும், நோட்டிஃபிகேஷனில் அந்தச் செய்தி காண்பிக்கப்படும் என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது.

பெறப்படும் செய்திகளில் புகைப்படங்கள் தானாக டவுன்லோட் ஆகும். செய்திகள் தானாக மறைந்துவிடும்(disappearing messages) அம்சத்தை ஆன் செய்யும்போது, ஆட்டோ- டவுன்லோட் ஆனில் இருந்தால், செய்திகள் அழிந்தாலும், புகைப்படங்கள் போனில் டவுன்லோட் ஆகியிருக்கும்.

செய்திகள் மறைக்கப்படும் அம்சம் ஆன் செய்யப்பட்டிருக்கும் சாட்டிலிருந்து அந்த அம்சம் ஆன் செய்யப்படாத மற்றொரு சாட்டிற்கு ஒரு செய்தியை ஃபார்வேர்டு செய்தால் அந்த செய்தி அப்படியே இருக்கும்.

wa

புதிய அப்டேட்டை பெறுவதற்கு முதலில் உங்களது வாட்ஸ் அப் செயலியை அப்டேட் செய்யுங்கள்.

பின்னர் யாருடைய சேட்டில் இந்த ஆப்ஷனை பயன்படுத்த விரும்புகிறீர்களோ, அவரின் பெயரை க்ளிக் செய்து ஓபன் செய்ய வேண்டும். அப்போது அவர்களுடனான சேட் ஓபன் ஆகும்

மீண்டும் மேலே உள்ள அவரது பெயரை க்ளிக் செய்யது அங்கே ‘Disappearing messages’ என்ற ஆப்ஷன் இருக்கும். அதை க்ளிக் செய்து ஆன் செய்து கொள்ளலாம்.

குரூப் என்றால் அட்மின் மட்டுமே Disappearing messages என்ற ஆப்ஷனை பயன்படுத்த முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here