சாட்-ஐ எப்போதும் மியூட்டில் வைக்கும் வகையில், புதிய அம்சத்தை வாட்ஸ் அப் உருவாக்கியுள்ளது.

பயனர்கள் ஒரு தனிநபர் அல்லது குழு சாட்-ஐ எட்டு மணி நேரம், ஒரு வாரம் அல்லது ஒரு வருடம் மியூட் செய்யலாம் என்ற நடைமுறை இருந்தது. இந்நிலையில் தற்போது ஆண்ட்ராய்டு மற்றும் iOS-க்கான புதிய வாட்ஸ் அப் அப்டேட் வெளியாகியுள்ளது. 

அதன்படி இனி எப்போதும் மியூட் செய்து கொள்வதற்கான வசதியை பயனர்களுக்கு வாட்ஸ் அப் அளித்துள்ளது. இந்த புதிய அம்சம் கடந்த சில மாதங்களாக iOS மற்றும் ஆண்ட்ராய்டு பீட்டா பயன்பாட்டில் சோதிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது வாட்ஸ் அப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது . இந்த புதிய அப்டேட்டில் சாட் – ஐ மியூட் செய்வதில் ஒரு வருடம் என்பதற்கு பதிலாக எப்போதும் என்ற ஆப்ஷனை கொடுத்துள்ளது . 

ஒருவேளை யாருக்கேனும் புதிய அப்டேட் காட்டவில்லை என்றால் அவர்களின் வாட்ஸ் அப் செயலியை அப்டேட் செய்ய வேண்டும் என அந்நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

👇
👆

.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here