வாட்ஸ்அப்பின் சமீபத்திய பீட்டா அப்டேட் ஆனது அடுத்ததாக வாட்ஸ்அப்பின் பொது தளத்தில் வரவுள்ள சில புதிய அம்சங்களை வெளிப்படுத்தியுள்ளது.

இந்த புதிய அம்சங்களானது கூடிய விரைவில் வாட்ஸ்அப்பின் iOS மற்றும் Android பயன்பாடுகளில் வரும் என்று எதிர்பார்க்கலாம். இவற்றில் சில வாட்ஸ்அப் அம்சங்கள் இன்னும் ஆல்பா நிலையிலேயே உள்ளன, இருந்தாலும் கூட சிலவற்றை பொது பீட்டா வெர்ஷன்களில் காண முடிகிறது. அப்படியாக வரும் நாட்களில் (டார்க் மோட் அம்சத்தினை தவிர்த்து) வாட்ஸ்அப்பில் அறிமுகமாகவுள்ள சில உற்சாகமான மற்றும் புதிய அம்சங்கள் என்னென்ன என்பதை நீங்கள் அறிந்துகொள்ள விரும்பினால், தொடர்ந்து படிக்கவும்.

01. பிளாக்ட்டு நோட்டீஸ் (Blocked notice)

நீங்கள் ஒரு காண்டாக்ட்டை பிளாக் செய்யும் பட்சத்தில், அது சார்ந்த நோட்டீஸை குறிப்பிட்ட காண்டாக்ட்டின் சாட்டில் அறிவிக்கும் அம்சம் தான் – பிளாக்ட்டு நோட்டீஸ். அதாவது நீங்கள் பிளாக் செய்த காண்டாக்ட்டிற்கு மெசேஜ் அனுப்ப விழையும் போது “நீங்கள் இந்த தொடர்பை பிளாக் செய்து உள்ளீர்கள். தொடர்ந்து மெசேஜ் செய்ய அன்பிளாக் செய்யவும்” என்கிற நோட்டீஸ் படிக்க கிடைக்கும். எவ்வாறாயினும், இந்த அறிவிப்பு ஆனது உங்களுக்கு மட்டுமே தெரியும், உங்களால் பிளாக் செய்யப்பட்ட நபருக்கு அல்ல.

02. பேஸ்புக் பே (Facebook Pay)

வாட்ஸ்அப் தனது ஆப்பில் பேஸ்புக் பேவை செயல்படுத்தி வருகிறது. இது முதலில் Android ஆப்பில் கண்டுபிடிக்கப்பட்டது, சமீபத்தில் iOS பயன்பாட்டிலும் தோன்றியுள்ளது. இந்த பேமண்ட் சிஸ்டம் அறிமுகமான பின்னர் வாட்ஸ்அப் பயனர்களால் தங்கள்து பயன்பாட்டிற்குள்ளேயே பேஸ்புக் பேவை பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அறியாதோர்களுக்கு இந்த மாத தொடக்கத்தில் பேஸ்புக் பே அறிமுகம் ஆனது. இது வாட்ஸ்அப் வழியாக மட்டுமின்றி மெசஞ்சர், இன்ஸ்டாகிராம் வழியிலான பண பரிவர்த்தனைகளை செய்ய அனுமதிக்கிறது.

03. ரெஜிஸ்ட்ரேஷன் நோட்டிஃபிக்கேஷன்ஸ் (Registration notifications)

வாட்ஸ்அப் ஆனது கூடிய விரைவில் மல்டி பிளாட்பார்ம் ஆதரவில் செயல்படும் என்று முன்னர் தெரிவிக்கப்பட்டது. அதாவது ஒன்றுக்கு மேற்பட்ட போன்களில் ஒரே வாட்ஸ்அப் அக்கவுண்ட்டை பயன்படுத்தும் அம்சம் ஆகும். இந்த அம்சத்தை நடைமுறைப்படுத்த வாட்ஸ்அப் நிறுவனமானது ரெஜிஸ்ட்ரேஷன் நோட்டிஃபிக்கேஷன்களை பயன்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது பயனர்கள் தங்கள் வாட்ஸ்அப் அக்கவுண்ட்டை வேறொரு போனில் பதிவு செய்ய முயற்சித்தால் அவர்களுக்கு ரெஜிஸ்ட்ரேஷன் கோட் குறித்து அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

04. பேஸ்புக் பிராண்டிங் (Facebook branding)

வாட்ஸ்அப் சமீபத்தில் தனது மெசேஜிங் அப்பில் பேஸ்புக் பிராண்டிங்கை ஒருங்கிணைத்தது என்பதை நாம் அறிவோம். தற்போது அந்த பேஸ்புக் பிராண்டிங்கில் மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. இப்போது பேஸ்புக் எனும் எழுத்துக்கள் ஆனது கேப்பிட்டல் லெட்டரில் காட்டப்பட்டுள்ளது, அதாவது பயனர்களின் கண்களில் அடிக்கடி படும்படி பெரிதாக உள்ளது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here