ஐ.ஒ.எஸ். தளத்துக்கான வாட்ஸ்அப் செயலியில் வாய்ஸ் மெசேஜ்களை புஷ் நோட்டிஃபிகேஷன்களில் இருந்தே பிரீவியூ செய்யும் வசதி தற்சமயம் சோதனை செய்யப்படுகிறது. விரைவில் இந்த அம்சம் செயல்பாட்டிற்கு வரவிருக்கிறது. ஏற்கனவே புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை நோட்டிஃபிகேஷன்களை பிரீவியூ செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது.

வாய்ஸ் மெசேஜ்களை பிரீவியூ செய்யும் வசதி எப்போது அனைவருக்கும் வழங்கப்படும் என்பது குறித்து இதுவரை எவ்வித தகவலும் வெளியிடப்படவில்லை. எனினும், இந்த அம்சம் எவ்வாறு இருக்கும் என்பது பற்றிய வெளியாகியுள்ள விவரங்களில்பிளே பட்டன் கொண்ட வாய்ஸ் மெசேஜ் காணப்படுகிறது.

இந்த அம்சம் பெரிய அப்டேட் வடிவில் மற்ற அம்சங்களுடன் சேர்த்தே வெளியிடப்படும் என கூறப்படுகிறது. ஐ.ஒ.எஸ். தளத்தில் டார்க் மோட் அம்சம் செப்டம்பரில் எதிர்பார்க்கப்படும் ஐ.ஒ.எஸ். 13 அப்டேட்டில் வழங்கப்படும் என தெரிகிறது.

வாட்ஸ்அப் ஐபோன்களில் நோட்டிஃபிகேஷன் சென்டரில் இருந்து நேரடியாக ஸ்டிக்கர்களை பிரீவியூ செய்யும் வசதி சமீபத்தில் வழங்கப்பட்டது. பயனர்கள் நோட்டிஃபிகேஷனை அழுத்திப்பிடித்து ஸ்டிக்கர்களை முழுமையாக பார்க்க முடியும். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here