புதிதக வாட்ஸ்அப்-இல் வழங்கப்பட்டிருக்கும் புதிய அப்டேட், மெசேஜ் ஃபார்வேர்டு செய்யப்படுவதை குறிப்பிடுகின்றன. இதன் மூலமாக உங்களுக்கு வரும் குறுந்தகவல்கள் அனுப்புவர்களால் டைப் செய்யப்பட்டதா அல்லது மற்றவர்களிடம் இருந்து உங்களுக்கு ஃபார்வேர்டு செய்யப்படுகிறதா என்பதை தெரிந்து கொள்ள முடியும்.

கடந்த மாதம் ஆன்ட்ராய்டு பீட்டா செயலியில் காணப்பட்ட இந்த அம்சம் உங்களுக்கு வாட்ஸ்அப்-இல் வரும் ஃபார்வேர்டு செய்யப்பட்ட மெசேஜ்களில் இனி ஃபார்வேர்டெட் (forwarded) என்ற குறியீடு இடம்பெறும்.

267721456948927

புதிய அம்சம் மூலம் வாட்ஸ்அப்-இல் பரப்பப்படும் போலி செய்திகளை குறைக்க இது காரணமாக இருக்கும். கடந்த வாரம் வாட்ஸ்அப்-இல் சஸ்பீஷியஸ் லின்க் டிடெக்ஷன் (suspicious link detection) அம்சம் சோதனை செய்யப்படுவது தெரியவந்தது.

இந்த அம்சம் மூலம் வாட்ஸ்அப்-இல் அனுப்பப்படும் இணைய முகவரிகள் போலியானதா இல்லையா என்பதை வாட்ஸ்அப் தானாக கண்டறியும். இதை கொண்டு போலி தளங்கள் அல்லது தீங்கு விளைவிக்கும் வலைதளங்களை பயனர்கள் மிக எளிமையாக கண்டறிந்து கொள்ள முடியும்.

உடனடியாக உங்களது ஸ்மார்ட்போனில் வாட்ஸ்அப்-பை அப்டேட் செய்வதன் மூலம் புதிய ஃபார்வேர்டெட் மெசேஜ் அம்சத்தை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்.

இதையும் படியுங்கள்

கொரோனா வைரஸ்: இந்தியாவில் இருக்கும் 30 லட்சம் பாலியல் தொழிலாளர்களின் நிலை என்ன தெரியுமா?

"சமூக இடைவெளி போன்றவற்றைப் பின்பற்றலாம். ஆனால் எங்களால் எங்கள் தொழிலை செய்ய முடியாமல் போகிறது. இதனால் எங்களுக்கு வருமானம் இல்லாமல் போகிறது" என்கிறார் நாசிக்கை சேர்ந்த ரேகா.

ஹைட்ராக்சி குளோரோகுயின் மீதான தடையை நீக்கி மருந்தை தருமாறு இந்தியாவிடம் வேண்டுகோள் வைத்த டிரம்ப்

அமெரிக்காவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்தப்படியால் இந்திய அரசிடம் “ஹைட்ராக்சி குளோரோகுயின்”  மருந்தை வழங்கும்படி டிரம்ப்  கேட்டுக்கொண்டுள்ளார்.  இதுகுறித்து பிரதமர் மோடியிடம்  தாம் பேசியதாகவும், இனிவரும்...

ஏர் இந்தியாவுக்கு பாகிஸ்தான் பாராட்டு

ஏர் இந்திய விமானங்கள், தங்கள் வான் பரப்பை பயன்படுத்த அனுமதி தந்திருக்கும் பாகிஸ்தான், அதோடு கொரோனா வைரஸ் தொற்று சமயத்தில், உங்களது சேவை பெருமையளிக்கிறது என பாராட்டும் தெரிவித்துள்ளது.

கொரோனாவுக்கு சிகிச்சை ; தமிழக அரசு அனுமதி வழங்கிய தனியார் மருத்துவமனைகள்(பட்டியல்)

கொரோனா வைரஸ் தொற்றியவர்களுக்குச் சிகிச்சையளிக்க, 112 தனியார் மருத்துவமனைகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. அந்த விபரங்கள் அடங்கியப் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. இதுவரை, கொரோனா வைரஸ்...

சலூன் கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலை நம்பவேண்டாம் – காவல்துறை

ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் சலூன் கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலை நம்பவேண்டாம் என தமிழக காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது. காலை 7 மணி முதல்...

கொரோனா காலத்தில் அரசியல் செய்யாமல் சமூகப் பேரிடரைச் சரிசெய்வீர் – மு.க.ஸ்டாலின்

தி.மு.க. தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கொரோனா காலத்தில் அரசியல் செய்யாமல் சமூகப் பேரிடரைச் சரிசெய்வீர் என்ற தலைப்பில் தனது முகநூல், டுவிட்டர், யூ.டியூப்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here