வாட்ஸ்அப் செயலியில் அறிமுகமான புதிய வசதி

WhatsApp’s latest beta version lets you add contacts by scanning their QR codes. The feature, which is available in beta on both iOS and Android.

0
277

வாட்ஸ்அப் செயலியில் பயனர்களின் சிறப்பான பயன்பாட்டிற்காக பல மேம்பட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில், வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் பீட்டா பதிப்பில் கியூஆர் கோட் வசதி சேர்க்கப்பட்டுள்ளது. 

வாட்ஸ்அப் பீட்டா 2.20.171 பதிப்பில் வழங்கப்பட்டுள்ள கியூஆர் கோட் அம்சத்தினை வாட்ஸ்அப் செட்டிங்ஸ் மெனுவின் ப்ரோஃபைல் பகுதியில் இயக்க முடியும்.

இந்த கியூஆர் கோடுகளை நண்பர்களுக்கு அனுப்பி, உங்களது நம்பரை பகிர்ந்து கொள்ள முடியும். அதேபோல் மற்றவர்களின் கியூஆர் கோடினை ஸ்கேன் செய்து அதனை காண்டாக்ட் லிஸ்ட்டில் சேர்த்து கொள்ளும் வசதியும் வழங்கப்படுகிறது. இத்துடன் ஏற்கனவே உருவாக்கிய கியூஆர் கோடினை வைத்து கொள்ளவோ அல்லது ரீசெட் செய்யவும் வசதி உண்டு.

முதற்கட்டமாக பீட்டா பதிப்பில் வழங்கப்பட்டுள்ளதால், இந்த அம்சம் விரைவில் ஸ்டேபில் பதிப்பில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கலாம்.

முன்னதாக இதேபோன்ற அம்சத்தினை நேம்டேக் எனும் பெயரில் இன்ஸ்டாகிராம் வழங்கி வருகிறது. இதை கொண்டு இன்ஸ்டாவில் உள்ள மற்ற நண்பர்களை கண்டுபிடிக்க முடியும்.

மேலும் வாட்ஸ்அப் செயலியில் status அளவு கடந்த மார்ச் மாத இறுதியில் அதன்காலளவு 15 விநாடிகளாக குறைக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் தற்போது அது மீண்டு 30 விநாடிகளாக அதிகரிப்பதாக நிறுவனம் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here