ஹைலைட்ஸ்

. இந்த அப்டேட் ioS மற்றும் ஆண்ட்ராய்டு தளங்களில் கொடுக்கப்படவுள்ளது.

. சீக்கிரமே அனைத்து தளங்களுக்கும் இந்த அப்டேட் செய்யப்படவுள்ளது.

. க்ரூப் செட்டிங்ஸ் மூலம் இந்த அப்டேட் கிடைக்கப் பெறுகிறது.

WhatsApp-inside-866x956

மெசேஜிங் ஆப்பில் இந்தியாவில் அதிகளவில் உபயோகப் படுத்தப்படும் வாட்ஸ்அப் தொடர்ந்து அப்டேட்களை வழங்கி வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது வாட்ஸ்அப் குழுவில் இருக்கும் செட்டிங்ஸ் ஆப்ஷனுக்குள் சென்று ஒரு தகவலை எல்லோருக்கும் அனுப்ப வேண்டுமா அல்லது அட்மின்களுக்கு மட்டும் அனுப்ப வேண்டுமா என்பதை தேர்வு செய்ய கூடிய புதிய அப்டேட்டை கொடுத்துள்ளது. அதேபோல, ‘க்ரூப் இன்ஃபோ-வை எல்லாரும் எடிட் செய்யலாமா அல்லது அட்மின் மட்டும் எடிட் செய்யலாமா என்பது குறித்தும் இந்த அப்டேட் மூலம் தேர்ந்தெடுக்க முடியும். மேலும், வாட்ஸ்அப் குழுவை உருவாக்கிய நபரை குழுவில் இருக்கும் மற்ற அட்மின்கள், வெளியேற்ற முடியாதபடி இந்த புதிய அப்டேட்டில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

JOIN

பல வாட்ஸ்அப் குழுக்களுக்கு தேவைப்படும் இந்த அப்டேட் தற்சமயம், வாட்ஸ்அப் பீட்டா(Beta), மற்றும் ஐபோன் வாட்ஸ்அப்களுக்கு மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது. சீக்கிரமே மற்ற வாட்ஸ்அப் வெர்ஷன்களுக்கும் இந்த அப்டேட் வசதி கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வாட்ஸ்அப் க்ரூப்புகளுக்கான மேலும் பல அப்டேட்களை, அந்நிறுவனம் அடுத்தடுத்து அப்டேட் செய்ய இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படியுங்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here