வாட்ஸ்அப் அறிமுகம் செய்யும் புதிய அம்சம்

The ShareChat video support is reported to be included in WhatsApp v2.20.81.3 beta for iPhone and WhatsApp v2.20.197.7 beta for Android.

0
176

ஃபேஸ்புக் நிறுவனத்தின் ஓர் அங்கமான வாட்ஸ்அப்பில் வாடிக்கையார்களின் வசதிக்கேற்ப புதிய அம்சங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தற்போது வாட்ஸ்அப் நிறுவனம் தனது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் பீட்டா வெர்ஷன்களில் ஷேர்சாட் வீடியோக்களை பார்க்கும் வசதியை வழங்குகிறது.

வாட்ஸ்அப் ஐஒஎஸ் பீட்டா 2.20.81.3 மற்றும்ஆண்ட்ராய்டு பீட்டா 2.20.197.7 வெர்ஷன்களில் ஷேர்சாட் வீடியோக்களை ஃபுளோட்டிங் வீடியோவாக பார்க்க முடிகிறது.

whatsapp-sharechat-0001

ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் இயங்குதளங்களின் புதிய வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷன்களில் இந்த அம்சங்கள் சோதனை செய்யப்பட்டு வருகிறது. வாட்ஸ்அப் செயலியில் ஷேர்சாட் வீடியோ பகிரப்பட்டால், அதனை பார்க்கக் கோரும் பிளே பட்டன் இடம் பெறுகிறது. அதனை க்ளிக் செய்ததும் வீடியோ பிக்சர் இன்பிக்சர் மோட் வடிவில் பிளே ஆகும்.

தற்சமயம் புதிய ஷேர்சாட் வீடியோ வசதி மட்டுமின்றி சாட்களில் வால்பேப்பர்களை கஸ்டமைஸ் செய்யும் வசதியும் சோதனை செய்யப்படுகிறது. இதைகொண்டு ஒவ்வொரு சாட்களிலும் வெவ்வேறு வால்பேப்பர்களை செட் செய்து கொள்ள முடியும்.

whatsapp-multi-wallpaper-000

வாட்ஸ்அப் செயலியில் வால்பேப்பர்களை கஸ்டமைஸ் செய்யும் வசதி முழுமையாக உருவாக்கப்படவில்லை என தெரிகிறது. அந்த வகையில் இந்த அம்சம் எதிர்கால அப்டேட்களில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக இதே வசதி யூடியூப் மற்றும் ஃபேஸ்புக் வீடியோக்களுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here