ஒவ்வொரு மாதமும் உலகம் பூராவும் சுமார் 45 கோடி பேர் வாட்ஸ்அப்பில் உள்ள ஸ்டேட்டஸ் அம்சத்தினை பயன்படுத்தி வருகின்றனர்.

வாட்ஸ்அப் செயலியில் புகைப்படம், வீடியோக்கள் மற்றும் எழுத்துக்களை நிரந்தரமாக பதிவிடும் வசதி மட்டுமே வழங்கப்படுகிறது. ஆனால் ஸ்னாப்சாட்டில் தானாக மறைந்துபோகும் சாட் வசதி வழங்கப்படுகிறது.

வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் பதிவிட்டதும், அவற்றை அழிக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. எனினும், இது ஸ்டேட்டஸ் பதிவிட்ட ஒரு மணி நேரத்திற்கு மட்டுமே வேலை செய்யும்.
இன்ஸ்டாகிராம் செயலியில், நிரந்தரமாகவும், குறைந்த நேரத்திற்கு என புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து கொள்ள முடியும். ஆனால் அதில் இடப்படும் டெக்ஸ்ட் பதிவுகள் நிரந்தரமானவை ஆகும்.

இதேபோன்ற அம்சத்தை வாட்ஸ்அப் மிக எளிமையாக தனது செயலியில் வழங்க இருக்கிறது.

இதற்கு பயனர்கள் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை பதிவிடும் போது தானாக குறிப்பிட்ட நேரத்திற்கு பின் மறைந்துபோகச் செய்ய டைமர் வசதியை சேர்க்க முடியும். வாட்ஸ்அப் செயலியில் தானாக அழிந்து போகும் ஸ்டேட்டஸ் வசதி விரைவில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாட்ஸ்அப்பில் எழுத்துக்கள் தானாக அழிந்து போகச் செய்யவோ அல்லது எவ்வளவு நேரம் தெரிய வேண்டும் என்பதை மிக எளிமையாக வழங்க முடியும் என கூறப்படுகிறது. ஸ்னாப்சாட்டில் உள்ளது போல் இந்த அம்சத்தினை வழங்கலாமா வேண்டாமா என்ற பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here