வாட்ஸ்அப்-பில் அதிகம் எதிர்பார்க்கப்படும் க்ரூப் வீடியோ காலிங் வசதி ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் தளங்களில் வழங்கப்படுகிறது.

021018_0633_WhatsAppfor1
புதிய அப்டேட் மூலம் க்ரூப் வீடியோ கால் செய்ய முடியும். பிப்ரவரி மாதத்தில் வாட்ஸ்அப் வெர்ஷன் 2.18.39 ஆன்ட்ராய்டு பீட்டா செயலியில் க்ரூப் வீடியோ காலிங் வசதி வழங்கப்படுவதற்கான அறிகுறிகள் காணப்பட்டன.

க்ரூப் வீடியோ காலிங் வசதி ஏற்கனவே 2.18.145 பதிப்பில் வழங்கப்படுகிறது. வாட்ஸ்அப்-பில் க்ரூப் வீடியோ காலிங் மூலம் க்ரூப்களில் இருக்கும் அதிகபட்சம் நான்கு பேருடன் ஒரே சமயத்தில் பேச முடியும்.

க்ரூப் வீடியோ கால் அனைவருக்கும் வழங்கப்படாமல் சிலருக்கு மட்டுமே வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய க்ரூப் வீடியோ காலிங் குறைந்தளவு வாடிக்கையாளர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும்.

வாட்ஸ்அப் சோதனை செய்து வரும் மற்ற அம்சங்களை போன்று இல்லாமல் புதிய வசதியை இன்வைட் மூலமாக ஆக்டிவேட் செய்ய முடியாது. இதே நிலை ஐஓஎஸ் தளத்துக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐஓஎஸ் தளத்தில் வாட்ஸ்அப் வெர்ஷன் 2.18.52 க்ரூப் வீடியோ காலிங் வசதி சேர்க்கப்பட்டுள்ளது.
021018_0633_WhatsAppfor2
புதிய க்ரூப் காலிங் செய்ய வாட்ஸ்அப் செயலியில் நீங்கள் வீடியோ கால் செய்ய வேணடிய கான்டாக்ட்-ஐ தேர்வு செய்ய புதிய க்ரூப் காலிங் வசதி உங்களுக்கு வழங்கப்பட்டு இருந்தால், Add participant என்ற பட்டன் திரையில் தெரியும், இந்த பட்டன் தெரியாதபட்சத்தில் வீடியோ காலிங் செய்ய முடியாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here