வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதியுடன் வெளியான நாய்ஸ் ஷாட்ஸ் ரஷ்

Smart wearables brand, Noise has launched its new sports wireless earbuds - Noise Shots Rush in India. They get an ergonomic silicone ear-hooks that make them secure and comfortable. With their truly wireless, in-ear design, Noise Shots Rush are allow you to focus on your workout with no wires and no distractions.

0
155

நாய்ஸ் நிறுவனம் (#Noise) இந்தியாவில் தனது புதிய இயர்பட்ஸ் ஷாட்ஸ் ரஷ்(#NoiseShotsRush) என்ற வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்துள்ளது.

புதிய இயர்பட்ஸ் IPX5 தரச்சான்று பெற்ற வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது. இதில் மூன்று பிரீசெட் மோட்களுடன் ஈக்வலைசர் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. வீடியோ, கேம்களுக்காக பயன்படுத்தும் போது ஆடியோ லேக் குறைவாக இருக்க ஏதுவாக 80எம்எஸ் அல்ட்ரா லோ – லேடென்சி மோட் வழங்கப்பட்டுள்ளது. 

நாய்ஸ் ஷாட்ஸ் ரஷ் இயர்பட்ஸ் பிளேபேக், வாய்ஸ் அசிஸ்டண்ட், வால்யூம் மற்றும் அழைப்புகளுக்கு முழுமையான தொடுதிரை வசதி வழங்கப்பட்டுள்ளது.  இதில் உள்ள பேட்டரியை கொண்டு 6 மணி நேரத்திற்கு மியூசிக் பிளேபேக், சார்ஜிங் கேஸ் சேர்த்து 24 மணி நேரத்திற்கு பிளேடைம் வழங்குகிறது. 

இந்தியாவில் ரூ. 3999 விலை என நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நாய்ஸ் ஷாட்ஸ் ரஷ் இயர்பட்ஸ்,  சார்கோல் பிளாக், குவிக் சில்வர் மற்றும் வைன் ரெட் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here