அடல் பிஹாரி வாஜ்பேயி
வியாழக்கிழமை உயிரிழந்த அடல் பிஹாரி வாஜ்பேயி இந்திய பிரதமராக பதவி வகித்த காலத்தில், இந்தியா அணுசக்தி சக்தி நாடாக வெளிப்பட்டது. அது இந்தியா, பாகிஸ்தானுடன் மோதுமோ என்ற அச்சத்தையும் ஏற்படுத்தியது.
காஷ்மீரின் சர்ச்சைக்குரிய பகுதியிலும், இந்திய மற்றும் பாகிஸ்தானிய துருப்புக்களுக்கு இடையே நீண்டகாலமாக தொடர்ந்து வந்த மோதல்களும் இந்த கவலையை அதிகரித்தன.
தனது பதவிக் காலம் முழுவதிலும் பல்வேறு கட்சிகளைக் கொண்டிருந்த கூட்டணியை ஒன்றாக வைத்திருக்க தொடர்ந்து போராடினார் வாஜ்பேயி. அதன் மூலம் இந்திய நலன்களை பாதுகாக்க கடின உழைப்பை நல்கிய மனிதர் என்ற நற்பெயரைப் பெற்றார் அவர்.
1924 டிசம்பர் 25ஆம் நாளன்று, மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் பிறந்த வாஜ்பேயி, அரசியல் கல்வியை கற்றுத் தேர்ந்து, பத்திரிகையாளர் மற்றும் சமூக சேவையாளராக பணியாற்றினார்.
அதே நேரத்தில், இந்தியத் துணைக்கண்டத்தில் பிரிட்டன் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவரும் ‘வெள்ளையனே வெளியேறு‘ இயக்கத்தில் செயல்பட்டார்.
நாடு விடுதலை அடைந்த பிறகு, வாஜ்பேயி இந்து தேசியவாத பாரதிய ஜன சங்க (பி.ஜே.எஸ்) கட்சித் தலைவர் சியாமா பிரசாத் முகர்ஜிக்கு தனி உதவியாளர் ஆனார்.news 1A bbc.003
1957ம் ஆண்டு நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட வாஜ்பேயி, இளைஞராக இருந்தாலும், அரசியல் வானில் ஒளிரும் நட்சத்திரம் என்ற நன்மதிப்பை பெற்றார்.
1975-77 ஆண்டுகளில் இந்திரா காந்தி “எமர்ஜென்சி” என்ற அவசரகால நிலையை நாட்டில் அமல்படுத்தியபோது, கைது செய்யப்பட்ட பல பி.ஜே.எஸ் ஆர்வலர்களில் வாஜ்பேயியும் ஒருவர்.
பல அரசியல் குழுக்கள் இணைந்திருந்த பிஜேஎஸ், ஜனதா கட்சியை உருவாக்கியது. பிறகு தேர்தல்களில் வெற்றி பெற்று அதிகாரத்திற்கு வந்தது.
மொரார்ஜி தேசாய் தலைமையிலான ஆட்சியில் வெளியுறவு அமைச்சராக பதவிவகித்த வாஜ்பேயி, 1979ஆம் ஆண்டு சீனாவுக்கு வரலாற்றுச் சிறப்பு மிக்க பயணத்தை மேற்கொண்டார். பாகிஸ்தானுடனான உறவுகளை மேம்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டார்.
1979ஆம் ஆண்டில் தம் பதவியை ராஜினாமா செய்த வாஜ்பேயி, 1980ஆம் ஆண்டு ஜனதா கூட்டணியின் ஆட்சி முடிவுக்கு வந்ததும், மற்றவர்களுடன் சேர்ந்து பாரதிய ஜனதாக் கட்சியை (பா.ஜ.க) தோற்றுவித்தார், கட்சியின் முதல் தலைவராகவும் பணியாற்றினார்.
news 1A bbc.004
இந்திராவுக்கு ஆதரவு
அமிர்தசரஸ் பொற்கோயிலை ஆக்கிரமித்த சீக்கிய போராளிகளுக்கு எதிராக இந்திரா காந்தி எடுத்த “ப்ளூ ஸ்டார்” நடவடிக்கைக்கு வாஜ்பேயி ஆதரவு தெரிவித்தார்.
ஆனால் தனது சீக்கிய மெய்காப்பாளர்களால் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து சீக்கியர்களுக்கு எதிராக வன்முறை வெடித்தபோது, அதற்கு மிகக் கடுமையான கண்டனங்களை வெளியிட்டவர் வாஜ்பேயி.
1980களில் கடும்போக்கு இந்து செயல்பாட்டார்களை பா.ஜ.க ஈர்த்தது. அவர்களில் பலர், 1000 க்கும் அதிகமானோர் உயிரிழக்க காரணமான 1992 டிசம்பர் மாதம் நடந்த முஸ்லிம்களுக்கு எதிரான மோதல்களில் பங்கு பெற்றனர்.
1996-ல், காங்கிரஸ் கட்சி தேர்தல்களில் தோல்வியை சந்திக்க, நாடாளுமன்றத்தில் மிகப் பெரிய அரசியல் கட்சியாக பா.ஜ.க உருவெடுத்தது.
அரசு அமைக்க வாஜ்பாய்க்கு வாய்ப்பு கிடைத்தாலும், நாடாளுமன்றத்தில் பல்வேறு பிரிவுகளாக பிரிந்து மோதிக்கொண்ட கட்சிகளை ஒன்றிணைக்க முடியாமல் 13 நாட்களிலேயே பதவி விலகினார் வாய்பேயி.

இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் தேசிய ஜனநாயக கூட்டணியை உருவாக்கிய வாஜ்பேயி பிரதமராக பதவியேற்றார்.
அது பல சங்கடங்களை விளைவித்த, சண்டை கூட்டணியாக இருந்தாலும், எதிர்கட்சி பலமாக இல்லாததால் பா.ஜ.க கூட்டணி ஆட்சியில் இருந்தது.
பலப்படுத்தப்பட்டது
புதிய அரசாங்கம் பதவியேற்ற சில வாரங்களில் ஐந்து நிலத்தடி அணு வெடிப்பு பரிசோதனைகளை மேற்கொண்ட இந்தியா உலகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
அணு சக்தி பரிசோதனைகள் நடந்ததாக வாஜ்பேயி அறிவித்தார். இது, அரசுக்கு நாடு முழுவதும் பரவலான பாராட்டை பெற்றுத் தந்ததுடன் பா.ஜ.கவுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தியது.
“நமது அணு ஆயுதங்கள் என்பதன் முழுப்பொருள், ஓர் எதிரியால் ஏற்படும் அணுசக்தி சண்டைக்கு எதிரான ஒரு தடுப்பு” என்று வாஜ்பேயி அறிவித்தார்.
news 1A bbc.005
இருந்தபோதிலும், இந்தியாவின் அணு ஆயுத பரிசோதனை முயற்சி நடைபெற்ற சில வாரங்களிலேயே பாகிஸ்தான் சொந்த அணு ஆயுத பரிசோதனைகளை நடத்தியது. இந்தியாவின் மீதான அச்சமே இதற்கு காரணம் என பல நாடுகள் கூறின.
காஷ்மீரில் நிலவும் நெருக்கடி, இரு நாடுகளும் உரிமை கோரும் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கும் இடையில் இருக்கும் மலைப்பகுதி போன்றவை இந்திய வெளியுறவு கொள்கையில் ஆதிக்கம் செலுத்தின.
இரு நாடுகளின் ஆயுதப் படைகள் மற்றும் காஷ்மீர் பிரிவினைவாதிகளுக்கு இடையில் நீடித்த தொடர்ச்சியான சச்சரவுகளும், மோதல்களும் தீவிரமடைந்தன.
இந்த சிக்கலான காலகட்டத்தில் மாறுபட்ட கருத்துகளை கொண்ட 17 கட்சிகளின் கூட்டணியைத் தொடர்ந்து தக்க வைக்க வாஜ்பேயி கடுமையாக போராடினார்.
news 1A bbc.006
பெரும்பான்மை பலம்
அணு ஆயுத சோதனைகளை நடத்திய பிறகு, பாகிஸ்தானுடனான மோதல் போக்கு அதிகரிப்பதை தடுக்க வாஜ்பேயி பலவிதமான முயற்சிகளை மேற்கொண்டார்.
பாகிஸ்தானின் அன்றைய பிரதமர் நவாஸ் ஷெரிஃபுடனான முக்கியமான உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக பாகிஸ்தான் நகரமான லாகூருக்கு இந்தியாவில் இருந்து பேருந்தில் பயணம் மேற்கொண்டார் பிரதமர் வாஜ்பேயி.
அரசியல் ரீதியாக பலவீனமாக இருந்த இரு பிரதமர்களும், நம்பிக்கை ஏற்படுத்தும் பல்வேறு நடவடிக்கைகளில் உடன்பட்டாலும், காஷ்மீர் பிரச்சினைக்கு அவர்களால் முற்றுப்புள்ளி வைக்க முடியவில்லை.
இறுதியாக 1999ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் பா.ஜ.க. பெரும்பான்மை பெற்றபோது, வாஜ்பேயி மீண்டும் பிரதமராக பதவியேற்றார்.

ஜெனரல் பர்வேஸ் முஷாரப்பின் கீழ் பாகிஸ்தான் ராணுவம் அந்நாட்டு அதிகாரத்தை கைப்பற்றிய பின்னர், இந்தியாவுக்கு பாகிஸ்தானுடனான பதற்றங்கள் தொடர்ந்தன.
1999 டிசம்பரில் நேபாள தலைநகர் காத்மாண்டு, மற்றும் டெல்லிக்கு இடையில் பயணித்த இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம், பாகிஸ்தானிய தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு ஆப்கானிஸ்தானுக்கு கொண்டு செல்லப்பட்ட்து.
கடத்தப்பட்ட விமானத்தை லாகூரில் தரையிறங்க அனுமதி கொடுத்த பாகிஸ்தானிய அதிகாரிகள் விமானத்திற்கு தேவையான எரிபொருளை நிரப்ப அனுமதி கொடுத்தது சீற்றத்தை ஏற்படுத்தியது.
பதற்றங்கள்
விமானத்தில் பயணித்த பயணிகள் பணயக்கைதிகளாக்கப்பட, அவர்களை விடுவிக்க, கடத்தல்காரர்களின் கோரிக்கைகளுக்கு தலைவணங்கி காஷ்மீர் தீவிரவாதிகள் பலரை விடுவிக்க வேண்டிய கட்டாயம் வாஜ்பேயிக்கு ஏற்பட்டது.
சந்தைகளை தனியாருக்கு திறந்துவிடும் வகையில், இந்திய அரசுக்கு சொந்தமான சில பொது நிறுவனங்களை தனியார்மயமாக்கும் கொள்கை, தொழிற்சங்கங்கள் மற்றும் அரசு ஊழியர்களால் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.
ஆனால் புதிய உயர் தொழில்நுட்ப தொழில்களுக்கு அவர் அளித்த ஆதரவு, இந்தியாஉலக அளவில் தொழில்நுட்பத்துறையில் ஒரு முக்கிய நாடாக உருவாகவும், நாட்டின் பொருளாதாரத்தை விரிவாக்கவும் உதவியது.
news 1A bbc.007
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றங்கள் குறையவேயில்லை.
2001இல் டெல்லியில் இந்திய நாடாளுமன்ற கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட ஆயுத தாக்குதலுக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையே மோதல் மீண்டும் வெடித்தது.
பாகிஸ்தான் நாட்டு குடிமக்கள் பலர் இதில் ஈடுபட்டிருந்ததை காவல்துறையினர் கண்டுபிடிக்க, பாகிஸ்தானுடனான எல்லைப் பகுதிக்கு ஐந்து லட்சம் வீர்ர்கள் கொண்ட துருப்புக்களை அனுப்பினார் வாஜ்பேயி.
இரண்டு ஆண்டுகள் நீடித்த இந்த பதற்ற நிலை
இஸ்லாமாபாத்துடன் புதிய சமாதான முயற்சிகளை மேற்கொள்ளும் விதமாக இரு தரப்பு உயர் அதிகாரிகளும் அண்டை நாட்டுக்கு வருகை தரவேண்டும் என்ற வாஜ்பேயின் உத்திக்கு பிறகு சற்றே தணிந்தது.
சீனாவின் ஒரு பகுதியாக திபெத்தை அங்கீகரித்த வாஜ்பேயி, பெய்ஜிங்கோடு இந்தியாவின் உறவுகளை உறுதிப்படுத்தினார். அது, இந்திய பொருளாதாரத்தில் சீன முதலீட்டை மேம்படுத்த உதவியது.
2004-ம் ஆண்டு தேர்தலில் பா.ஜ.க.வும் அதன் கூட்டாளிகளும் வெற்றிபெறுவார்கள் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சோனியா காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சியிடம் ஆச்சரியமாக தோல்வி அடைந்தது வாஜ்பேயி தலைமையிலான பாஜக.
news 1A bbc.008
காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அதிகாரத்தை கைப்பற்றியது; மன்மோகன் சிங் பிரதமராக பதவியேற்றார்.
40 ஆண்டுகளுக்கும் மேலாக தீவிர அரசியலில் ஈடுபட்டிருந்த வாஜ்பேயி 2005-ல் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
பல இந்தியத் தலைவர்களைப் போலவே, அடல் பிஹாரி வாஜ்பேயியும் அதிகாரத்தை தக்கவைக்க சிலநேரங்களில் முரட்டுத்தனமாக செயல்பட்டதாகவும் கருதப்படுகிறது.
ஆனால், நாட்டின் எல்லைகளை உறுதியுடன் பாதுகாக்கும் பாதுகாப்பாளராகவும், பல்வேறு தரப்பினரையும் இணைக்கும் சக்தியாகவும் திகழ்ந்தார் அடல் பிஹாரி வாஜ்பேயி.

courtesy:bbc

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here