அரசன் படத்தில் நடிப்பதற்காக வாங்கிய முன்பணம் 50 லட்சத்தை திருப்பி தராவிட்டால் சொத்துக்கள் ஜப்தி செய்யப்படும் என நடிகர் எஸ்டிஆரை (சிம்பு) நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

பேஸ்சன் மூவி மேக்கர்ஸ் என்ற நிறுவனம் எஸ்டிஆர் நடிப்பில் அரசன் என்ற படத்தை தயாரிப்பதாக இருந்தது. இதற்காக எஸ்டிஆருக்கு ஒரு கோடி சம்பளம் பேசி ஐம்பது லட்சத்தை முன்பணமாக தந்தனர். இது நடந்தது 2013 இல். ஆனால், எஸ்டிஆர் அரசன் படத்தில் நடிக்கவில்லை, பணத்தையும் திருப்பித் தரவில்லை.

எஸ்டிஆர் வாங்கிய முன்பணத்தை வட்டியுடன் திருப்பித்தர வேண்டும் என சம்பந்தப்பட்ட நிறுவனம் நீதிமன்றம் சென்றது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், முன்பணத்தை எஸ்டிஆர் திருப்பி தரவில்லை என்றால் அவரது சொத்துக்கள் ஜப்தி செய்யப்படும் என எச்சரித்துள்ளது. முன்னதாக எஸ்டிஆரின் உடமைகள் ஜப்தி செய்யப்படும் என இதே நீதிமன்றம் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்