வாக்கு எந்திரங்களை வைத்து எதை வேண்டுமானாலும் செய்யலாம் : பாஜகவினரே சொல்லிட்டாங்க

0
279

மேற்கு வங்க பாஜக பிரதிநிதிகள் வாக்கு எந்திரங்களால் எதையும் செய்ய முடியும் என கூறியுள்ளனர். 

சமீபத்தில் மேற்கு வங்கத்தில் மூன்று தொகுதிகளில் சட்டப்பேரவை இடைத்தேர்தல் நடந்தது. இதில் 3 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் வெற்றி பெற்றது. இதனால் மேற்கு வங்க அரசு  தில்லுமுல்லுகளை செய்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளது அம்மாநில பாஜக தலைமை.

 தேர்தல் ஆணையம் தேர்தல்களை கண்காணித்தாலும், இடைத்தேர்தலை நடத்துவது மாநில அரசுதான். திரிணாமூல் காங்கிரஸ் தேர்தலில் வெல்ல என்ன வேண்டுமானாலும் செய்யும் எனக் கூறியுள்ளதோடு, வாக்கு எந்திரங்களை  வைத்து எதை வேண்டுமானாலும் செய்யலாம். ஆளும் அரசு வாக்கு எண்ணிக்கையின்போது மோசடி செய்யக்கூடும் என்பதை மறுக்க முடியாது என்று பாஜக தேசிய செயலாளரும் மேற்கு வங்க பாஜக தலைவருமான ராகுல் சின்ஹா கூறியுள்ளார். 

தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் பாஜகவே வெல்லும் என்று கூறியிருந்தது.   ஆனால்  மூன்று தொகுதிகளிலும் திரிணாமூல் வென்றுள்ளது சந்தேகத்தைக் கிளப்புகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.  

காலியாகஞ்ச் தொகுதியில் திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் தபன் டெப் சின்ஹா 2414 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளரை வென்றிருக்கிறார். கரிம்புர் தொகுதியில் திரிண்மூல் காங்கிரஸ் வேட்பாளர் பிம்லெண்டு சின்ஹா ராய் 24000 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளரை வென்றிருக்கிறார். கரக்புர் சாதர் தொகுதியில் திரிண்மூல் காங்கிரஸ் வேட்பாளர் பிரதீப் சர்கார் 20788 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளரை வென்றிருக்கிறார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here