மக்களவைத் தேர்தலில், பயன்படுத்தப்படும் வாக்குப் பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்கு ஒப்புகைச் சீட்டு இயந்திரங்கள் ஆகியவற்றை எடுத்துச் செல்லும் வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

வரும் ஏப்ரல் மாதம் 11ஆம் தேதியில் இருந்து மே மாதம் 19 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான முடிவுகள் மே மாதம் 23 ஆம் தேதி வெளியிடப்படும்.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் ஏற்கெனவே அமலுக்கு வந்துவிட்ட நிலையில், தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், வாக்குப் பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்கு ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களைக் கண்காணிப்பதற்காக அவற்றை எடுத்துச் செல்லும் வாகனங்களில், ஜிபிஎஸ் கருவியைப் பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கும் தகவல் அனுப்பப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், வாக்குப் பதிவு இயந்திரங்கள் சில சாலையோரமும், தங்கும் விடுதியிலும் கண்டெடுக்கப்பட்டன. இதையடுத்து, தேர்தல் ஆணையம் இந்த முடிவை எடுத்துள்ளது.

[orc]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here