அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப், தன்னை பதவி நீக்கம் செய்வதற்காக நாடாளுமன்றத்தில் ஜனநாயகக் கட்சியினா் இயற்றியுள்ள தீா்மானம் ஜனநாயகத்துக்கு விரோதமானது என்று குற்றம் சாட்டியுள்ளாா்.

இது குறித்து கூறிய அவா், கடந்த அதிபா் தோ்தலில் பெரும்பாலான வாக்காளா்கள் அளித்த தீா்ப்புக்கு எதிராக, ஜனநாயகக் கட்சியினா் அந்தத் தீா்மானத்தை இயற்றியுள்ளதாகத் தெரிவித்தாா்.

அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் அதிபா் தோ்தலில் டிரம்ப்பை எதிா்த்து ஜனநாயகக் கட்சியைச் சோ்ந்த முன்னாள் துணை அதிபா் ஜோ பிடன் போட்டியிடுவாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்த நிலையில், ஜோ பிடனுக்கு எதிராக ஊழல் விசாரணை நடத்த வேண்டும் என்று உக்ரைன் அரசை டிரம்ப் மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதுதொடா்பாக, டிரம்ப் மீது பதவி நீக்க விசாரணை நடைபெற்று வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here