வாக்காளர் பட்டியலை வாக்காளர்களே சரிபார்க்கும் திட்டம் – தலைமை தேர்தல் அதிகாரி

0
120

வாக்காளர் பட்டியலை வாக்காளர்களே சரிபார்க்கும் திட்டத்தின் கீழ் இதுவரை 2 லட்சத்து 33 ஆயிரம் பேர் பேர் தங்களது பெயர் மற்றும் முகவரிகளை சரிபார்த்துள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், வாக்காளர் பட்டியலில் 18 ஆயிரம் பேர் பெயர் திருத்தம் செய்துள்ளதாக குறிப்பிட்டார்.

வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு திட்டம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு மேற்கொள்ள தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், அதற்காக மகளிர் திட்ட மேலாண்மை இயக்குனரோடு ஆலோசணை மேற்கொண்டுள்ளதாகவும் சாகு கூறினார்.

மகளிர் குழுக்கள் மூலமாக வாக்காளர் பட்டியல் சரிபார்க்க நடவடிக்கை மேற்கொள்ள முயற்சி எடுக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

தலைமைசெயலகத்தில் உள்ள ஒவ்வொரு துறை சார்ந்த இரண்டு பேருக்கு வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு திட்டத்தின் கீழ் பயிற்சி அளித்து, மற்ற ஊழியர்களின் பெயர்களை திருத்தம் செய்ய முயற்சி எடுக்கப்பட்டுள்ளது என்றும் தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here