வாக்காளர்களின் விரலில் மை வைத்து பணம் கொடுத்த பாஜக; ஓட்டு போட வேண்டாம் என்று மிரட்டல்

0
712

உத்தரப்பிரதேசத்தின் சந்தாலி மக்களவை தொகுதியில் உள்ள கிராமத்தில் சனிக்கிழமை வாக்காளர்களுக்கு கையில் மைவைத்து ரூ500 பணம் கொடுத்துவிட்டு ஓட்டு போட வேண்டாம் என்று மிரட்டிள்ளனர் .  இதுதொடர்பாக காவல்துறையினரும், அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உத்தர பிரதேசத்தின் வாரணாசி உட்பட, எட்டு மாநிலங்களில் உள்ள, 59 தொகுதிகளில் 7-ஆம் கட்ட மற்றும் இறுதிக்கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. மக்கள் ஆர்வத்துடன் காலையிலேயே வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தின் சாந்தலி மக்களவை தொகுதியில் உள்ள கிராமத்தில் நேற்றே சனிக்கிழமை வாக்காளர்களுக்கு மை வைக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது. 

பாஜகவை சேர்ந்த 3 பேர் தங்களது விரலில் மை வைத்து ரூ. 500 கொடுத்துச்சென்றாக கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். நீங்கள் எங்கள் கட்சிக்கு தான் வாக்களிக்க வேண்டும். இல்லையென்றால் வாக்களிக்க முடியாது என்றும் கூறியதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். தேர்தலுக்கு ஒரு நாளைக்கு முன்னதாகவே வாக்காளர்கள் விரலில் மை வைக்கப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக காவல்துறையினரும், அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here