வழுக்கி விழுந்தாரா கீர்த்தி சுரேஷ்? – வைரலான வதந்தி

0
209

படப்பிடிப்பில் நடிகை கீர்த்தி சுரேஷ் வழுக்கி விழுந்ததாக ஒரு வீடியோ நேற்று வைரலானது.

ஆற்றங்கரையோரம் உள்ள பாறைகளில் படப்பிடிப்பு நடந்த போது, பாறைகளில் கீர்த்தி சுரேஷ் நடந்து வருகையில் பாறை வழுக்கி கீழே விழுந்தார். உடனடியாக அருகில் நின்றிருந்த படப்பிடிப்புக்குழுவைச் சேர்ந்த இருவர் அவரை தூக்கிவிட்டனர். இதுதான் அந்த வீடியோவில் இருந்த காட்சி.

கீர்த்தி சுரேஷ் விழுந்திட்டாரா என்று இணையத்தில் அபாயக்குரல்கள் இன்னும் ஒலிக்கிறது. கீர்த்தி சுரேஷ் ரசிகர்கள் சாந்தம் கொள்வார்களாக. விழுந்தது கீர்த்தி சுரேஷ் அல்ல வேறெnரு மலையாள நடிகை. பெயர் லிண்டா குமார். குஞ்சுராமன்டெ குப்பாயம் (குஞ்சுராமனின் சட்டை) படத்தில் லிண்டா குமார் நடித்துக் கொண்டிருந்தபோதுதான் இந்த விபத்து நடந்தது. லாங் ஷாட்டில் லிண்டா குமாரின் தோற்றம் கீர்த்தி சுரேஷ் போல் இருக்க, வீடியோவை வைரலாக்கினர் கீர்த்தி சுரேஷின் ரசிகர்கள்.

இதையும் படியுங்கள்:ஜிஎஸ்டி எனக்கு புரியவில்லை’: பாஜக அமைச்சரின் பேச்சால் சர்ச்சை

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்