வழிபாட்டுத் தலங்களை திறக்க அனுமதி

0
339

நாட்டில் கொரோனா பாதிப்பை கட்டுக்குள் கொண்டுவருவதற்காக ஏற்படுத்தப்பட்ட பொது முடக்கம் நாளையுடன் முடிவுக்கு வருகிறது. இந்த நிலையில் 5-வது கட்ட பொதுமுடக்கம் குறித்த முக்கிய அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. 

இந்த 6-வது கட்ட பொது முடக்கம் ஜூன் 30-ம்தேதி வரை நீடிக்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதன்படி ஜூன் 8-ம்தேதி முதல் நாட்டில் உள்ள அனைத்து வழிபாட்டுத் தலங்கள், ஓட்டல்கள், உணவகங்கள், ஷாப்பிங் மால்கள் உள்ளிட்டவற்றை திறந்துகொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இங்கு சுகாதாரத்துறை வகுத்துள்ள விதிமுறைகள் கடைபிடிக்கப்பட வேண்டும். இருப்பினும் நோய் தடுப்பு பகுதிகளில் கட்டுப்பாடுகள் தொடர்ந்து நீடிக்கும். 

பள்ளிகள், கல்லூரிகள், கல்வி நிலையங்கள், பயிற்சி மையங்கள் உள்ளிட்டவற்றை மாநில அரசுகளின் வழிகாட்டுதலின்படி, நிலைமையைப் பொறுத்து திறந்து கொள்ளலாம். இதுதொடர்பாக கல்வி நிலைய நிர்வாகிகள், பெற்றோருடன் ஆலோசனை நடத்தும்படி மாநில அரசுகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் ஜூலையில் முடிவு எடுக்க வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. 

சர்வதேச விமானங்கள், மெட்ரோ ரயில், சினிமா திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள், நீச்சல் குளங்கள், கேளிக்கை பூங்காக்கள் உள்ளிட்டவைகள் கொரோனா பாதிப்பு நிலைமையை பொறுத்து மீண்டும் செயல்பட அனுமதி அளிக்கப்படும்.

இரவு 9 மணியில் இருந்து அதிகாலை 5 மணி வரையில் தனிநபர்கள் நடமாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் பொதுமக்கள் அவசிய தேவைக்காக மட்டும் வெளியே செல்லலாம்.

கட்டுப்பாடுகள் தளர்வு நோய் தடுப்பு மண்டலங்களான Containment zoneகளுக்கு பொருந்தாது. நோய் தடுப்பு மண்டலங்களில் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here