வளர்ச்சியால் விளைந்த போராட்டம் இது

0
1344

வளர்ந்த நாடுகளில் பெரும் உற்பத்தித் திறன் கொண்ட தாமிர உருக்கு ஆலைகள் செயல்படுவதில்லை; சுற்றுச்சூழலுக்கும் உடல் ஆரோக்கியத்துக்கும் கேடு விளைவிக்கும் என்பதால் வளர்ந்த தேசங்களின் மக்கள் இதனை அனுமதிப்பதில்லை. இந்தியாவின் வளர்ச்சியடைந்த மாநிலங்கள் வளர்ந்த நாடுகளுக்கு நிகரானவை. இந்தியாவில் வளர்ச்சியில் முன்னணியில் இருக்கும் தமிழ்நாட்டில் தூத்துக்குடியின் மக்கள் தங்களுக்கு தாமிர நச்சு ஆலை வேண்டாமென்று முடிவெடுத்துள்ளார்கள்.

இந்தியாவிலேயே இரண்டாவது அதிகமான மொத்த உள்நாட்டு உற்பத்தி கொண்ட மாநிலம் தமிழ்நாடு; தமிழ்நாட்டைப்போல பன்முகத்தன்மை கொண்ட பொருளாதாரத்தை வேறெங்கும் பார்ப்பது அரிது என்று பொருளாதார வளர்ச்சி ஆராய்ச்சி நிபுணர் ஜெயரஞ்சன் ஆய்வுப்பூர்வமாக பதிவு செய்திருக்கிறார். இதனைக் களத்திலிருந்து தூத்துக்குடிக்காரர் ஒருவரே நேரடியாக முகநூலில் பதிவு செய்துள்ளார்.

Empower Sankar
Yesterday at 12:51pm •
#ஸ்டெர்லைட் தொழிற்சாலையை மூடிட்டாங்க, வேலைவாய்ப்பு போச்சு, தூத்துக்குடியின் பொருளாதாரமே அழிஞ்சு போச்சு ன்னு மகாபாரதம் ரேஞ்சுக்கு கதை விட்டுக்கிட்டு இருக்காங்க….
தமிழ்நாட்டில் “மனிதவள மேம்பாட்டில் (HDI – Human Development Index) ல் சென்னைக்கு அடுத்த இடத்தில் இருக்கும் நகரம் தூத்துக்குடி…
தூத்துக்குடியின் பொருளாதார காரணத்தால், 300 வருடங்களுக்கு முன்பே போர்சுக்கீசியரும், டச்சுக்காரர்களும், பிறகு ஆங்கிலேயர்களும் ஆட்சி செய்த ஊர் தூத்துக்குடி…
150 வருடங்களுக்கு முன்பே துறைமுகமும், ரயில் நிலையமும் அமைக்கப்பட்ட நகரம் தூத்துக்குடி…
இந்தியாவின் மூன்றாவது பெரிய துறைமுகமும், சரக்குப் பெட்டிகள் கையாளும் துறைமுகமும் இங்கே தான் இருக்கிறது…
தமிழ்நாட்டின் 90% உப்பு இங்கே தான் உற்பத்தி ஆகிறது… டெக்ஸ்டைல்ஸ், மீன்பிடி தொழில், ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகம் என்று அனைத்து பொருளாதாரத்தையும் கையில் வைத்திருக்கும் நகரம் இது…..
ஆண்களுக்கு ஆறு கல்லூரிகள், பெண்களுக்கு நான்கு கல்லூரிகள், அரசு தொழில்நுட்ப கல்லூரி, அரசு மருத்துவக் கல்லூரி, மத்திய ஆராய்ச்சிக் கல்லூரிகள், 30 உயர்நிலை – மேல்நிலைப் பள்ளிகள் என்று அனைத்தையும் தூத்துக்குடி வைத்திருக்கிறது….
30 – 40 வருடங்களுக்கு முன்பே,
அகில இந்திய கால்பந்து போட்டி,
அகில இந்திய கைப்பந்து போட்டி,
அகில இந்திய கூடைப்பந்து போட்டி,
அகில இந்திய டென்னிஸ் போட்டி
என்று இந்தியாவின் தலைசிறந்த அணிகளை வரவழைத்து வருடாவருடம் போட்டிகள் நடத்திய ஊர் தூத்துக்குடி …
அத்தனையும் எழுதினால், எழுதிமுடிக்க ஒரு வாரம் ஆகும்.
ஒரேயொரு #ஸ்டெர்லைட் மட்டுமே தூத்துக்குடியின் அடையாளமும் இல்லை, அது மட்டுமே தூத்துக்குடியின் பொருளாதாரமும் இல்லை…
அதனால, உங்க டேஷ்பக்தியை கொஞ்சம் மூடி வச்சிட்டு, ஆல் இண்டியா ரேடியோல தம்பூரா வாசிப்பாங்க… அதைக் கேட்டுக்கிட்டே தூங்குங்க….

ஸ்னோலின்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here