முருகன் அவதரித்த வரலாறு :

புராணங்களின் படி சிவபெருமானின் நெற்றி கண்ணிலிருந்து தீப்பொறியானது ஆறு பகுதிகளாக  சரவணப் பொயகையில் விழுகிறது . இவை ஆறு குழந்தைகளாக உருமாறி முருகன் அவதரிக்கிறார். இவ்வாறு முருகன் அவதரித்தது வைகாசி மாத விசாக நட்சத்திரத்தில் தான். முருகன் அவதரித்த விசாக நட்சத்திரமும் ஆறு நட்சத்திரங்களின் கூட்டணி தான்.

முருகப் பெருமான் அவதரித்த நாளே வைகாசி விசாக திருநாளாக கொண்டப்படுகிறது. இத்  திருநாளில் அனைத்து முருகன் கோவில்களிலும்,  முருகப்பெருமானுக்கு விஷேஷ அபிஷேக ஆராதனைகள் செய்யபடுகிறது.

வைகாசி விசாகம் விரதம் இருக்கும் முறை :

விசாகம் அன்று அதிகாலையில் எழுந்து  நீராடி, வீட்டை தூய்மை செய்து, பூஜை அறையை அலங்கரித்து , வழிபாட்டை தொடங்க வேண்டும். முதலில் விநாயக பெருமானை வணங்கி விட்டு பின்னர் குல தெய்வ வழிபாடு செய்து முடித்து விட்டு , முருகனுக்கு பூஜை செய்ய ஆரம்பிக்க வேண்டும். பஞ்ச முகம் விளக்கு வைத்து , அதில் பஞ்ச தீப எண்ணெய் விட்டு விளக்கு ஏற்றி , பூஜையில் அவருக்கு உகந்த செவ்வரளி மலர் கொண்டு அர்ச்சனை செய்ய வேண்டும். நிவேதனமாக அப்பம் செயது படைக்க வேண்டும். கந்தரப்பம் என்று இதற்கு பெயர் உண்டு. நீர்மோர், இனிப்பு, பானகம் மற்றும் தயிர் சாதம் நிவேதனமாக படைக்கலாம். பழங்கள் வைத்தும் படைக்கலாம். வீட்டில் பூஜை முடித்து விட்டு பின்னர் முருகன்கோவிலுக்கு சென்று அவரை  வணங்க வேண்டும்.

அன்றைய தினம் அவருக்கு விசேஷ அபிஷேகம் நடைபெறும்.  அபிஷேகத்திற்கு தங்களால் இயன்ற பொருள் வாங்கி தரலாம்.
1. பால் – ஆயுள் கூடும்
2. பச்சரிசி மாவு – கடனகள் தீரும்
3. நல்லெண்ணெய்  – நன்மை விளையும்
4. சந்தனம்- சரீர நோய் நீங்கும்
5. இளநீர்  – உஷ்ண நோய் நீங்கும், குலம் தழைக்கும்
6. திருநீறு – புகழ், கீர்த்தி, செல்வாக்கு மேலோங்கும்

இவ்வாறு ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு பலன் இருக்கிறது.

நம்மால் முடிந்த பொருளாக பால், தயிர், இளநீர், தேன் , பச்சரிசி மாவு, எலுமிச்சை பழம், பஞ்சாமிர்தம், பழங்கள், சந்தனம், பன்னீர், திருநீறு போன்ற பொருட்களை வாங்கி கொடுத்து அபிஷேகம் மற்றும் அலங்காரத்தில் ஐயனை  தரிசித்து இல்லம் திரும்ப வேண்டும்.

முடிந்தவர்கள் ஒருபொழுது இருக்கலாம், இயலாதவர்கள் ஒரு வேளை  உணவருந்தி விரதம் இருக்கலாம்.

பெண்கள் அன்று தயிர் சாதம் மற்றும் நீர்மோர், பானகம் போன்றவற்றை தனமாக தரலாம்.

அன்றைய தினம் குடை, தண்ணீர், நீர்மோர் , தயிர் சாதம் , பானகம் தானமாக தருவது நம்முடைய புண்ணிய பலன்களை பன்மடங்காக பேருக்கும் என்பது திண்ணம்.

வைகாசி விசாக சிறப்புகள்:

பன்னிரு ஆழ்வார்களில் நம்மாழ்வார் அவதரித்தது விசாகத்தில் தான்.
அர்ஜுனன் சிவனிடம் பாசுபத ஆயுதம் பெற்ற நாள் விசாகம் ஆகும்
திருச்செந்தூரில் உஷ்ணம் தணிக்கும் உற்சவம் நடைபெறும் , பாரச முனி குமாரர்கள் சபா விமோசனம் நிகழ்வு நடைபெறுகிறது
கன்னியாகுமரில் அம்மனுக்கு ஆராட்டு விழா நடைபெறுகிறது.

வட நாட்டில் புத்தர் ஞானம் பெற்ற நாளாக புத்த பூர்ணிமா கொண்டாடப்படுகிறது.
திருமுல்லைவாயில் மாசிலாமணீஸ்வரர் கோவிலில் இறைவனும் இறைவியும் ஜோதியாக லிங்கத்தில் ஐக்கியமானது விசாக திருநாளில் தான். அதுவும் விமரிசையாக கொண்டப்படுகிறது.

திருப்போரூர் சிதம்பரம் ஸ்வாமிகள் சித்தியானதும் விசாகத்தில் தான். அங்கு அவருடைய ஜீவ சமாதி அமைந்திருக்கிறது. இந்த நாளில் அவருக்கு குரு பூஜை செய்ய படுகிறது.

உத்திரகோசமங்கையில் அன்று நீராடினால் ( இயம நியமங்கள் படி ) முன் ஜென்ம – இந்த ஜென்ம பாவங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.

ஆந்திர மாநிலம் சிம்மாசலத்தில் உள்ள வராக நரசிம்ம பெருமாளுக்கு அன்று விஷேஷ பூஜைகள் நிகழ்த்தப்பட்டு அவர் மேலிருக்கும் சநதனம் நீக்கப்பட்டு , மூலவரின் இயற்கை திருமேனியை தரிசிக்கும் நாளாக இருக்கிறது.  மற்ற நாட்களில் அவரை சந்தன காப்புடன் மட்டுமே தரிசிக்க இயலும்.

மேலும் எமதர்ம ராஜன் அவதரித்ததும் இந்த நாளில் தான். அவரையும் , முருகனையும் இன்று வணங்குவதால் நோய் நீங்கி, நீண்ட ஆயுள் பெற முடியும்.

விசாகம் அன்று ஒரு பொழுது இருப்பதால் பகை விலகும், நோய் நீங்கும், பிரிந்தவர் ஒன்று சேருவர். பிரிந்த குடும்பங்கள் இணையும். ஆயுள் பலமடையும். இன்று முருக பெருமானின் சஷ்டி கவசம், கந்த குரு கவசம், ஷண்முக கவசம், திருப்புகழ்  பாராயணம் செய்வதால் இன்னல்கள் நீங்கி, செல்வம் பெருகி, குலம் தழைக்கும்.

கோவில் கோவிலாக செல்பவர்கள் விசாகத்தில் ஒரு பொழுது இருந்தால் போதும் புத்திர பாக்கியம் கிட்டும் என்பது திண்ணம்.

குல தெய்வம் தெரியாதவர்கள் முருகனை குல தெய்வமாக ஏற்று வணங்கி வர குல தெய்வத்தை வழிபடாத தோஷம் நீங்கும்.

இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த வைகாசி  விசாக திருநாளில் முருகன் மற்றும் எமதர்மராஜனை வழிபடுவோம், வையத்தில் வாழ்வாங்கு வாழ்வோம்.
25.05.2021 அன்று வைகாசி விசாகம் திருநாள் ஆகும் 

குருவே துணை.
நன்றி,
ஆஸ்ட்ரோலக்ஷ்மி 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here